தமிழ்நாடு

அமைச்சர் செந்தில் பாலாஜி அறிவிப்பால் மதுப்பிரியர்கள் மகிழ்ச்சி!

Published

on

தமிழக அமைச்சர் செந்தில்பாலாஜியின் அறிவிப்பால் டாஸ்மாக் மதுக்கடைகளில் மது வாங்கி குடிக்கும் மது பிரியர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

டாஸ்மாக் மதுக்கடைகளில் மது விற்பனை செய்யும் விற்பனையாளர்கள், மேலாளர்கள் தங்கள் இஷ்டத்திற்கு விலை வைத்து விற்பனை செய்து வருவதாகவும், எந்த மதுவகை என்ன விலை என்பது குறித்து ,மதுபிரியர்களுக்கு தெரியாமல் உள்ளதாகவும் தகவல் வந்தன. மேலும் டாஸ்மாக் மதுக்கடைகளில் கூடுதல் விலைக்கு மதுபானங்கள் விற்கப்படுவதை தடுக்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் மது பிரியர்கள் தரப்பில் இருந்து கோரிக்கை விடப்பட்டது.

இந்த கோரிக்கையின் அடிப்படையில் அமைச்சர் செந்தில்பாலாஜி தற்போது அதிரடி உத்தரவை பிறப்பித்துள்ளார். இதன்படி டாஸ்மாக் கடைகளில் கூடுதல் விலைக்கு மது விற்பனை செய்யப்படுவதை தடுப்பதற்காக ஒவ்வொரு மதுக்கடை முன்பு விலைப் பட்டியல் வைக்க வேண்டுமென்று எந்தெந்த மதுவகை என்ன விலை என்பது குறித்த விலைப்பட்டியலை ஒரு வாரத்திற்குள் அனைத்து மதுக்கடைகளும் வைக்க வேண்டும் என்றும் செந்தில்பாலாஜி தெரிவித்துள்ளார்.

இந்த விலை பட்டியல்படி தான் டாஸ்மாக் விற்பனையாளர்கள் மேலாளர்கள் மதுவகைகளை விற்பனை செய்ய வேண்டும் என்றும் விலைப்பட்டியலில் உள்ள விலையை விட ஒரு ரூபாய் அதிகமாக விற்றாலும் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் மது பிரியர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

மேலும் டாஸ்மாக் மதுக் கடையில் வாங்கும் மது வகைகளுக்கு ரசீது தர வேண்டும் என்ற கோரிக்கையும் எழுப்பப்பட்டு வருகிறது. ஆனால் கடைகளில் கூட்டம் அதிகமாக இருக்கும் என்பதால் அனைத்து மதுப்பிரியர்களுக்கும் ரசீது தருவது சாத்தியமற்றது என்பதால் தான் இந்த விலைப்பட்டியல் வைக்கப்பட்டுள்ளதாகவும் மது பிரியர்கள் மதுவை விலைப்பட்டியலில் உள்ள விலையை பார்த்து அதன்படி பணம் கொடுத்து வாங்கிக் கொள்ளலாம் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

மேலும் டாஸ்மாக் மதுக்கடைகள் படிப்படியாக குறைக்கப்படும் என்றும் டாஸ்மாக் மதுக்கடைகளில் விற்பனை இலக்கு என்று எதுவும் நிர்ணயிக்கப்பட மாட்டாது என்றும் அமைச்சர் செந்தில்பாலாஜி தெரிவித்துள்ளார்.

Trending

Exit mobile version