தமிழ்நாடு

12 மணிக்கு மூடப்பட்டது டாஸ்மாக் கடைகள்: ஒரே நேரத்தில் குடிமகன்கள் குவிந்ததால் பரபரப்பு!

Published

on

தமிழகத்தில் இன்று முதல் பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ள நிலையில் டாஸ்மாக் கடைகள் காலை 8 மணி முதல் 12 மணி வரை மட்டுமே திறக்க வேண்டும் என்று நிபந்தனை விதிக்கப்பட்டது. இதனை அடுத்து காலை 8 மணிக்கே டாஸ்மாக் கடை முன் குடிமகன்கள் குவிந்திருந்தனர்

கடை திறந்தவுடன் ஒருவருக்கொருவர் முண்டியடித்துக்கொண்டு டாஸ்மாக் கடையில் மது பாட்டில்களை வாங்கி சென்றனர். பெரும்பாலான குடிமகன்கள் மாஸ்க் அணியவில்லை என்பதும் தனிமனித இடைவெளி என்றால் கிலோ என்ன விலை என்று கேட்கும் அளவுக்கு தான் டாஸ்மாக் கடைகளில் கூட்டம் இருந்தது என்பதும் குறிப்பிடத்தக்கது

குறிப்பாக 12 மணி நெருங்க நெருங்க கடை மூடி விடுவார்கள் என்ற அச்சத்தில் குடிமகன்கள் முண்டியடித்துக்கொண்டு சரக்குகளை கையில் வாங்கி கொடு ஆட்டம் போட்டது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது

சலூன் கடைகள் உட்பட மற்ற அனைத்து கடைகளையும் மூடி விட்டு டாஸ்மாக் கடைகளை மட்டும் திறந்து வைப்பது எந்த வகையில் நியாயம் என மற்ற கடைக்காரர்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர். டாஸ்மாக் கடைகளை அடியோடு ஒழித்தால் மட்டுமே கொரோனா வைரஸ் கட்டுக்குள் வரும் என்பதே அனைவரும் கருத்தாக இருக்கிறது

நாளை முதல்வராக பதவி ஏற்க இருக்கும் முக ஸ்டாலின் அவர்கள் முதல் கையெழுத்தாக டாஸ்மாக் கடைகளை மூடுவது குறித்த கோப்பில் கையெழுத்திடுவாரா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும். கொரோனா வைரஸ் காலத்தில் டாஸ்மாக் கடைகளை மூட வேண்டும் என எதிர்க்கட்சியாக இருந்தபோது குரல் கொடுத்த திமுகவினர் அதை ஆளுங்கட்சியாக இருக்கும்போது செயல்படுத்துவார்களா? என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

Trending

Exit mobile version