தமிழ்நாடு

தமிழக அரசின் உத்தரவை எதிர்த்து நீதிமன்றம் சென்ற டாஸ்மாக் ஊழியர்கள்!

Published

on

டாஸ்மாக் மது கடைகள் செயல்படும் நேரம் திடீரென மாற்றப்பட்டதை அடுத்து டாஸ்மாக் ஊழியர்கள் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக பல மாதங்களாக மூடப்பட்ட டாஸ்மாக் கடைகள் சமீபத்தில் திறக்கப்பட்டது என்பதும் இருப்பினும் காலை 10 மணி முதல் இரவு 8 மணி வரை மட்டுமே டாஸ்மாக் மதுக்கடைகள் இயங்கும் என்று அறிவிக்கப்பட்டு இருந்தது என்பதும் குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் தமிழக அரசு திடீரென வெளியிட்ட உத்தரவு ஒன்றில் காலை 10 மணி முதல் இரவு 8 மணி வரை இருந்த டாஸ்மாக் கடைகளின் வேலை நேரத்தை இனி நண்பகல் 12 மணி முதல் இரவு 10 மணி வரை மாற்றி அமைத்துள்ளதாக அறிவித்தது.

இதற்கு டாஸ்மாக் விற்பனையாளர்கள் சங்கம் கடும் எதிர்ப்பு தெரிவித்ததோடு சென்னை உயர் நீதிமன்றத்தில் இந்த உத்தரவை எதிர்த்து மனுத் தாக்கல் செய்து உள்ளது. அந்த மனுவில் தொழில்சங்க வேலைநேர பிரிவு சட்டப்படி வேலை நேரம் மாற்றம் தொடர்பாக அங்கீகரிக்கப்பட்ட சங்கங்களுக்கு 21 நாட்களுக்கு முன்னதாகவே அறிவிப்பு கொடுக்க வேண்டும் என்றும் ஆனால் எந்த ஒரு முன்னறிவிப்பும் இல்லாமல் தன்னிச்சையாக வேலை நேரம் மாற்றப்பட்டு உள்ளது என்றும் இது சட்டவிரோதம் என்றும் கூறியுள்ளது.

மேலும் பணப்புழக்கம் அதிகமாக உள்ள டாஸ்மாக் கடைகளில் இரவு 10 மணிக்கு வரை கடைகளைத் திறந்து வைத்திருந்தால் பாதுகாப்பற்ற சூழ்நிலை நிலவும் என்றும் அந்த மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த மனு விரைவில் விசாரணைக்கு வர உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

seithichurul

Trending

Exit mobile version