செய்திகள்

நாளை டாஸ்மாக் விடுமுறை… குடிமகன்களுக்கு அதிர்ச்சி கொடுத்த அரசு…..

Published

on

கொரோனா வைரஸ் மற்றும் ஒமிக்ரான் வைரஸ் பரவலை கட்டுப்படுத்துவதற்காக தமிழகத்தில் இரவு ஊரடங்கும், ஞாயிறு கிழமைகளில் முழு ஊரடங்கும் ஏற்கனவே அமல்படுத்தப்பட்டுள்லது. அந்த வகையில் வரும் ஜனவரி 23ஆம் தேதி(நாளை) ஞாயிறு அன்று முழு ஊரடங்கு அமல் படுத்தப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது. ஆனால் அதே நேரத்தில் ஒரு சில தளர்வுகள் அறிவிக்கப்பட்டு உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில், நாளை ஊரடங்கின் போது டாஸ்மாக் கடைகள் மூடப்படும் என அரசு அறிவித்துள்ளது. இது குடிமகன்களுக்கு அதிர்ச்சியை கொடுத்துள்ளாது.

ஏற்கனவே, சென்னை சென்ட்ரல், எழும்பூர் ரயில் நிலையம், கோயம்பேடு பேருந்து நிலையம் போன்ற இடங்களில் வழக்கமான ஆட்டோக்கள் கால் டாக்சிகள் அனுமதி உண்டு என்ற தளர்வை தமிழக அரசு அறிவித்துள்ளது.

அதேபோல் தமிழகத்தின் மற்ற மாவட்ட ரயில் நிலையம், வெளியூர் பேருந்து நிலையங்களுக்கும் இது பொருந்தும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது. மேலும் ஏற்கனவே தடை செய்யப்பட்ட செயல்பாடுகளின் தடைகள் தொடரும் என்றும் தமிழக அரசு அறிவித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Trending

Exit mobile version