தமிழ்நாடு

டாஸ்மாக் ஊழியர்களுக்கு மேலாண்மை இயக்குனர் எச்சரிக்கை: ஏன் தெரியுமா?

Published

on

டாஸ்மாக் ஊழியர்களுக்கு டாஸ்மாக் நிறுவனத்தின் மேலாண்மை இயக்குனர் முக்கிய எச்சரிக்கை விடுத்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

தமிழகத்தில் உள்ள 6 ஆயிரத்துக்கும் மேற்பட்ட டாஸ்மாக் மதுக்கடைகளில் பணிபுரியும் ஊழியர்களுக்கு டாஸ்மார்க் நிறுவனத்தின் மேலாண்மை இயக்குனர் சுப்பிரமணியன் என்பவர் சுற்றறிக்கை ஒன்றை அனுப்பியுள்ளார். அதில் இருக்கும் முக்கிய குறிப்புகள் பின்வருமாறு:

* டாஸ்மாக்’ மதுபான சில்லரை விற்பனை கடைகள், உயர் ரக எலைட் (Elite) மதுபான சில்லரை விற்பனை கடைகளில் ‘பில்’ புத்தகம், தினசரி சிட்டா, சரக்கு இருப்பு மற்றும் விற்பனை, வருகை, ஆய்வு உள்பட 21 பதிவேடுகளை முறையாக தினந்தோறும் பராமரிக்க வேண்டும்.

* மேற்கண்ட ஆவணங்கள் பராமரிக்கப்படாமல் இருப்பது கண்டறியப்பட்டால் சம்பந்தப்பட்ட கடை ஊழியர்கள் மீது உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்பட வேண்டும்.

* கிடங்குகளில் இருந்து ‘எலைட்’ கடைகளுக்கு ‘புல்’ (750 மி.லி.) அல்லது ஒரு லிட்டர் (1,000 மி.லி.) அளவிலான உயர்ரக மதுபானங்கள் மட்டுமே விற்பனைக்கு அனுப்பப்பட வேண்டும்.

* விற்பனையாகும் மதுபானங்கள் மற்றும் பீர் வகைகளுக்கு கட்டாயம் வாடிக்கையாளர்களுக்கு ரசீது வழங்க வேண்டும். அதில் மதுபானத்தின் பெயர், அளவு, அரசு நிர்ணயித்த விலை மற்றும் கடை ஊழியர்களின் கையொப்பம் இருக்க வேண்டும். மதுபானங்கள் விலை பட்டியல் வாடிக்கையாளர்களின் பார்வைக்கு தெரியும்படி இருப்பு பட்டியலுடன் கட்டாயம் வைக்கப்பட வேண்டும்.

* உற்பத்தியாளர்களிடம் இருந்து மதுபான கிடங்கில் இருந்து பெறப்பட்ட நாளில் இருந்து 90 நாட்களுக்குள் விற்பனை செய்திட வேண்டும். 90 நாட்களுக்கு மேற்பட்ட மதுபானங்கள் இருப்பில் இருக்கக் கூடாது. மதுபானங்கள் விற்பனையை அதிகளவில் ‘பி.ஓ.எஸ்’ (POS) எந்திரம் மூலம் செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேற்கண்ட விதிகளை மீறும் கடை ஊழியர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கையை சம்பந்தப்பட்ட மாவட்ட மேலாளர் எடுக்க வேண்டும். இல்லையென்றால் மாவட்ட மேலாளர் மீது உரிய ஒழுங்கு நடவடிக்கை மேற்கொள்ளப்படும். இவ்வாறு அந்த சுற்றறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

 

seithichurul

Trending

Exit mobile version