தமிழ்நாடு

விவசாய நிலங்களில் உள்ள டாஸ்மாக் கடைகளை முட உத்தரவு!

Published

on

விளைநிலங்களில் அனுமதி இல்லாமல் டாஸ்மாக் கடைகள் அமைக்கப்பட்டுள்ளன. அவற்றை மூட வேண்டும் என்று சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டு இருந்தது.

தேசிய நெடுஞ்சாலைகளில் உள்ள டாஸ்மாக் கடைகள் உச்ச நீதிமன்ற தீர்ப்பை அடுத்து மூடப்பட்டது. அப்படி மூடப்பட்ட கடைகளில் பல அருகில் உள்ள விவசாய நிலங்களில் அமைக்கப்பட்டு இருந்தது.

இதை எதிர்த்து ஈரோடு மாவட்டத்தைச் சேர்ந்த நல்லச்சாமி நாச்சிமுத்து என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் சென்ற மாதம் வழக்கு தொடர்ந்திருந்தார். இந்த வழக்கை முதலில் விசாரித்த உயர் நீதிமன்றம் விளை நிலங்களில் அமைக்கப்பட்டுள்ள டாஸ்மாக் கடைகள் குறித்த அறிக்கையைச் சமர்ப்பிக்கக் கூறி ஒத்திவைத்திருந்தது.

இன்று அந்த வழக்கு மீண்டும் விசாரணைக்கு வந்தபோது 110 கடைகள் அனுமதி இல்லாமல் விளைநிலங்களில் செயல்பட்டு வருவதாக அரசு அறிக்கை சமர்ப்பித்தது.

அறிக்கையை ஏற்றுக்கொண்ட நீதிபதிகள் விவசாய நிலங்களில் டாஸ்மாக் கடைகளை அமைக்கக் கூடாது என்பதில் உயர் நீதிமன்றம் உறுதியாக உள்ளது. எனவே உடனடியாக அந்த 110 டாஸ்மாக் கடைகளையும் உடனே மூட வேண்டும். கடைகளை மூடுவது மட்டுமில்லாமல் 18-ம் தேதி அதற்கான அறிக்கையையும் சமர்ப்பிக்க வேண்டும் என்று உத்தரவிடப்பட்டுள்ளது.

Trending

Exit mobile version