கிரிக்கெட்

CSK வீரர் குறித்து சர்ச்சையை கிளப்பிய பிரபல எழுத்தாளர்- அதிரும் ஐபிஎல் களம்!!!

Published

on

இங்கிலாந்து கிரிக்கெட் அணியின் ஆல் ரவுண்டரான மொயில் அலி, இந்த முறை சென்னை சூப்பர் கிங்ஸ் அணி சார்பில் ஐபிஎல் போட்டிகளில் விளையாட உள்ளார். இஸ்லாம் மதத்தைப் பின்பற்றி வரும் மொயின் அலி குறித்து, பிரபல எழுத்தாளர் தஸ்லிமா நஸ்ரின் சர்ச்சைக்குரிய வகையில் கருத்து தெரிவித்துள்ளார். 

மொயின் அலி குறித்து வங்கசேத பெண் எழுத்தாளர் தஸ்லிமா நஸ்ரின் ட்விட்டரில் பதிவிட்டுள்ள கருத்துதான் சர்ச்சைக்கு காரணமாக அமைந்துள்ளது. அதில் அவர் மொயின் அலி ஒருவேளை கிரிக்கெட் வீரராக ஆகமால் இருந்திருந்தால் அவர் சிரியா சென்று ஐ.எஸ்.ஐ.எஸ் அமைப்பில் சேர்ந்திருப்பார் என்று பதிவிட்டிருந்தார்.

இந்த சர்ச்சை குறித்து மொயின் அலி இன்னும் வாய்த்திறக்காத நிலையில், அவரின் சார்பில் அவரது சட்டரீதியிலான செயல்களை பார்த்துக்கொள்ளும் ஏசஸ் மிடில் ஈஸ்ட் நிறுவனம் அதிரடி நடவடிக்கை எடுத்துள்ளது. இதுகுறித்து ட்வீட் செய்துள்ள அந்த நிறுவனம், தஸ்லிமா நஸ்ரின் மீது அவதூறு வழக்கு தொடர ஆலோசித்து வருவதாகவும், இதுபோன்ற செயல்களில் ஈடுபடுவோர்களை விடக்கூடாது என்றும் தெரிவித்துள்ளது. எனவே விரைவில் தஸ்லிமா மீது வழக்கு பாயும் என எதிர்பார்க்கப்படுகிறது.

மொயின் அலியைப் பற்றி எழுத்தாளர் நஸ்ரின் இப்படி கூறியுள்ளதற்கு இங்கிலாந்து அணியைச் சேர்ந்த கிரிக்கெட் வீரர்கள் ஜோஃப்ரா ஆர்ச்சர், ஜோஸ் பட்லர் உள்ளிட்டோர் கடும் எதிர்ப்பைத் தெரிவித்துள்ளனர். 

Trending

Exit mobile version