தமிழ்நாடு

தஞ்சையில் மீண்டும் கொரோனா தொற்று அதிகரிக்க என்ன காரணம்?

Published

on

தமிழ்நாட்டில் கொரோனா வைரஸ் தொற்று நாளுக்கு நாள் படிப் படியாக குறைந்து வருகிறது.

நேற்றைய நிலவரத்தைப் பொறுத்தவரையில்,

தமிழ்நாட்டில் நேற்று மட்டும் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள்: 2,652

தமிழ்நாட்டில் மொத்தம் மட்டும் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள்: 25,21,438

சென்னையில் நேற்று மட்டும் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள்: 165

கோவையில் நேற்று மட்டும் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள்: 290

தஞ்சையில் நேற்று மட்டும் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள்: 191

தமிழ்நாட்டில் நேற்று மட்டும் கொரோனாவால் பலியானவர்கள்: 36

பரப்பளவைப் பொறுத்தவரையிலும், மக்கள் தொகையைப் பொறுத்தவரையிலும் தஞ்சை மாவட்டம் சிறியதாக இருந்தாலும் தொற்று பாதிப்பு அதிகமாக இருப்பதற்கு என்ன காரணம் என்பது குறித்து இந்திய மருத்துவ சங்கத்தின் முன்னாள் தலைவர், மருத்துவர் மோகன் தாஸ், ‘மக்கள் தங்களுக்கு கொரோனா அறிகுறிகள் தென்பட்டவுடன், மருந்தகத்துக்குச் சென்று தாங்களே மருந்து சாப்பிடுகிறார்கள்.

3, 4 நாட்களில் பாதிப்பு அதிகமடைந்த பின்னர் அவர்கள் மருத்துவமனைகளுக்கு வருகிறார்கள். இந்த சமயத்தில் அவர்கள் மூலம் பலருக்கு கொரோனா பரவும். அதேபோல கொரோனா சிகிச்சை முடிந்த பின்னர் சுமார் 15 நாட்கள் தனிமையில் இருக்குமாறு அவர்களுக்கு அறிவுறுத்தப்படுகிறது. அதையும் கேட்காமல் சுற்றி வருகிறார்கள். இதனாலும் மற்றவர்களுக்கு தொற்று பாதிப்பு ஏற்படும். இந்த காரணங்களால் தஞ்சையில் கொரோனா பாதிப்பு தொடர்ந்து அதிகரித்த வண்ணம் இருக்கலாம்’ எனத் தெரிவித்து உள்ளார்.

 

seithichurul

Trending

Exit mobile version