தமிழ்நாடு

டான்செட் நுழைவுத்தேர்வு: நாளையுடன் முடிகிறது கால அவகாசம்!

Published

on

டான்செட் நுழைவுத் தேர்வுக்கு விண்ணப்பிக்க நாளை உடன் கடைசி தேதி என அறிவிக்கப்பட்டுள்ளதை அடுத்து இதுவரை விண்ணப்பிக்காதவர்கள் உடனடியாக விண்ணப்பிக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்

அண்ணா பல்கலைக்கழகத்தின் கீழ் இயங்கும் பொறியியல் கல்லூரிகளில் எம்பிஏ, எம்சிஏ மற்றும் முதுநிலை பொறியியல் படிப்புகளில் சேருவதற்கு பொது நுழைவுத் தேர்வுக்கு விண்ணப்பிக்க ஏப்ரல் 18-ஆம் தேதி முடிவடைகிறது

இந்த நிலையில் நாளையுடன் இந்த காலஅவகாசம் முடிவடைவதால் நாளை மாலைக்குள் தகுதி உள்ள மாணவர்கள் விண்ணப்பிக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்

நுழைவுத்தேர்வுக்கு விண்ணப்பிக்க விரும்பும் மாணவர்கள் tancet.annauniv.edu என்ற இணையதளம் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த தேர்வு குறித்த முக்கிய தேதிகள் குறித்த விவரங்கள் பின்வருமாறு:

டான்செட் நுழைவுத்தேர்வுக்கு விண்ணப்பிக்க கடைசி தேதி: ஏப்ரல் 18, 2022

டான்செட் அட்மிட் கார்டு வெளியிடப்படும் தேதி: மே 2, 2022

டான்செட் MCA நுழைவுத் தேர்வு தேதி: மே 14, 2022

டான்செட் MBA நுழைவுத் தேர்வு தேதி: மே 15, 2022

 

Trending

Exit mobile version