தமிழ்நாடு

TANCET நுழைவுத் தேர்வுக்கு எப்போது விண்ணப்பிக்கலாம்: அண்ணா பல்கலை அறிவிப்பு

Published

on

வரும் 2022-23 கல்வியாண்டில் MBA, MCA, M.E., http://M.Tech., M.Plan., M.Arch., படிப்புகளில் சேர TANCET நுழைவுத் தேர்வுக்கு வரும் 30-ம் தேதி முதல் ஏப்ரல் 18-ம் தேதி வரை இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம் என அண்ணா பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது. https://tancet.annauniv.edu/tancet

இந்த TANCET தேர்வு எழுத விரும்பும் விண்ணப்பதாரர்கள் அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிறுவனங்களில் ஏதேனும் ஒரு இளங்கலை பட்டம் முடித்திருக்க வேண்டும் என்பது தகுதியாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. தொலைதூரக் கல்வி திட்டத்தின் மூலம் B.E./B.Tech/ Degree தேர்ச்சி பெற்றவர்கள் இந்த தேர்விற்கு விண்ணப்பிக்க முடியாது.

TANCET தேர்வு வரும் 14.05.2022 மற்றும் 15.05.2022 ஆகிய தேதிகளில் நடைபெற உள்ள நிலையில் இந்த தேர்வுக்கு ஏப்ரல் 30-ம் தேதி முதல் ஏப்ரல் 18-ம் தேதி வரை https://tancet.annauniv.edu/tancet என்ற் இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம்

தேர்வு கட்டணம் ரூ.600.00, ஆனால் SC /SCA /ST தேர்வர்கள் ரூ.300 செலுத்தினால் போதுமானது.

இந்த நுழைவுத்தேர்வு தமிழகத்தில் 15 இடங்களில் நடைபெறும். அந்த பகுதிகள் பின்வருவன:
1. சென்னை 2. கோயம்புத்தூர் 3. சிதம்பரம் 4. திண்டுக்கல் 5. ஈரோடு 6.காரைக்குடி 7. மதுரை 8. நாகர்கோவில் 9. சேலம் 10. தஞ்சாவூர் 11.திருநெல்வேலி 12. திருச்சிராப்பள்ளி 13. வேலூர் 14. விழுப்புரம் 15. விருதுநகர்

 

seithichurul

Trending

Exit mobile version