தமிழ்நாடு

ரஜினிகாந்த் கர்நாடகாவின் காவி தூதரா?

Published

on

சென்னை விமான நிலையத்தில் நேற்று பேட்டியளித்த நடிகர் ரஜினிகாந்த், ஏழு பேர் விடுதலை குறித்தான கேள்விக்கு எந்த ஏழு பேர் என பதில் கேள்வி எழுப்பினார். இது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இதனையடுத்து அவர் இன்று தனது இல்லத்தில் இது தொடர்பாக விளக்கம் அளித்தார்.

அப்போது ஏழு பேர் யார் என்று தெரியாத அளவிற்கு ரஜினிகாந்த் முட்டாள் கிடையாது. ராஜீவ்காந்தி கொலை வழக்கில் ஏழு பேர் என்று அந்த கேள்வி கேட்டப்பட்டிருந்தால் உடன் பதில் சொல்லியிருப்பேன். எடுத்த எடுப்பிலேயே ஏழு பேர் என்று சொன்னதால் நான் புரியாமல் எந்த எழு பேர் என்று கேட்டேன் என்றார்.

மற்றொரு கேள்விக்கு, பாஜக ஆபத்தான கட்சி என எதிர்க்கட்சிகள் கருதினால், அவர்களுக்கு அது ஆபத்தான கட்சி தானே என்றும், பாஜக ஆபத்தான கட்சியா என்பதை நான் இப்போது கூற முடியாது, அதை மக்கள் முடிவு செய்வார்கள் என்றார். பாஜக குறித்த ரஜினியின் இந்த கருத்து குறித்து பிரபல தமிழ் இணையதளம் ஒன்றுக்கு சட்டமன்ற உறுப்பினர் தமிமுன் அன்சாரி பதில் அளித்துள்ளார்.

அதில், பாஜக குறித்து ரஜினி கூறிய பதில் என்பது, அவரது உள்மன ஓட்டத்தை வெளிப்படுத்தியிருப்பதாகத்தான் கருதுகிறேன். ஏற்கனவே ரஜினியை பற்றி இயக்குநர் இமயம் பாரதிராஜா, கர்நாடகாவின் காவி தூதர் என்று விமர்சித்தார். அதற்கு ஏற்பத்தான் இவரது கருத்துக்களும் அமைந்துள்ளது என்றார் தமிமுன் அன்சாரி.

Trending

Exit mobile version