செய்திகள்

தமிழகத்தில் மேலும் 33 பேருக்கு ஓமைக்ரான் பாதிப்பு….

Published

on

கொரோனா வைரஸை தொடர்ந்து தற்போது ஓமைக்ரான் என்கிற வைரஸ் உலகம் முழுவதும் வேகமாக பரவி வருகிறது. இந்தியாவிலும் இந்த வைரஸ் வேகமாக பரவி வருகிறது.

வெளிநாட்டியிலிருந்து விமானத்தின் மூலம் இந்தியா வரும் பயணிகளிடம் சோதனை நடத்தப்பட்டு வந்தாலும் எப்படியே இது இந்தியாவுக்குள் நுழைந்துவிட்டது. குஜராத், கேரளா, மகாராஷ்டிரா, தமிழகம் என பல மாநிலங்களிலும் ஓமைக்ரான் வைரஸ் பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது. அதிகபட்சமாக டெல்லியில் 57 பேர்களுக்கும், மகாராஷ்டிராவில் 54 பேர்களுக்கும் ஒமிக்ரான் வைரஸ் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

omicron

நேற்று ஒரே நாளில் தமிழகத்தின் அண்டை மாநிலமான தெலுங்கானாவில் 14 பேருக்கு ஒமிக்ரான் வைரஸ் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளதாக வெளிவந்திருக்கும் தகவல் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. அதே போல் தமிழகத்திலும் படிப்படியாக ஒமிக்ரான் வைரஸ் பரவி வருகிறது. தமிழகத்தில் ஏற்கனவே ஒருவருக்கு ஓமைக்ரான் பாதிப்பு உறுதி செய்யப்பட்டது.

omicron

இந்நிலையில், தமிழகத்தில் மேலும் 33 பேருக்கு ஒமைக்ரான் கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது என மருத்துவதுறை அமைச்சர் மா. சுப்பிரமணியன் செய்தியாளர்களிடம் தெரிவித்துள்ளார். அதேநேரம் அவர்கள் அனைவரும் சிகிச்சையில் நலமாக உள்ளதாகவும் அவர் கூறினார். அதோடு, 24 பேரின் பரிசோதனை முடிவு இன்று வரவேண்டியுள்ளது என அவர் கூறினார். சென்னையில் 26 பேரும், மதுரையில் 4 பேரும், திருவண்ணாமலையில் 2 பேரும், சேலத்தில் ஒருவரும் பாதிக்கப்பட்டுள்ளனர்.

டெல்லி, மகாராஷ்டிரா விற்கு அடுத்து ஓமைக்ரான் அதிக பாதிப்பிற்கு உள்ளான மாநிலங்களில் மூன்றாவது இடத்தில் தமிழகம் உள்ளது குறிப்பிடத்தக்கது.

Trending

Exit mobile version