செய்திகள்

2 நாளில் ரூ.358 கோடி விற்பனை… தமிழகத்தில் டாஸ்மாக் வசூல் சாதனை…

Published

on

தீபாவளி, பொங்கல், ஆடி 18, புத்தாண்டு என முக்கிய பண்டிகை என்றாலே டாஸ்மாக்கில் மதுபான விற்பனை களை கட்டும். அன்று ஒருநாளில் ரூ.200 கோடி, 300 கோடி வருமானம் என செய்திகள் வெளியாகும்.

அது போலவே இந்த ஆண்டும் பொங்கல் விழாவை முன்னிட்டு டாஸ்மாக்கில் விற்பனை களை கட்டியுள்ளது. பொங்கலுக்கு 4 நாட்கள் அரசு விடுமுறை அளித்துள்ளது. பல தனியார் நிறுவனங்களும் 2 நாட்கள் விடுமுறை அளித்துள்ளது. அதேநேரம், மதுபானம் அதிகம் விற்பனை ஆகும் கரிநாள் என அழைக்கப்படும் உழவர் திருநாளன்று அரசு ஊரடங்கு அறிவித்துள்ளது. எனவே, மதுபான விரும்பிகள் கடந்த 12ம் தேதி முதலே மதுபானங்களை அருந்த துவங்கிவிட்டனர். பலரும் மது பானங்களை வாங்கி ஞாயிற்றுக்கிழமைக்காக ஸ்டாக் வைக்க துவங்கி விட்டனர்.

இந்நிலையில், கடந்த 12 மற்றும் 13ம் தேதி என இரண்டு நாட்களில் மட்டும் டாஸ்மாக்கில் ரூ.358 கோடி மதுபான விற்பனை நடந்துள்ளது. அதாவது 12ம் தேதி ரூ.153 கோடியும், 13ம் தேதி ரூ.203 கோடியும் விற்பனை ஆகியுள்ளது. மேலும், இன்றும் நாளையும் பொங்கல் பண்டிகை இருப்பதால் மேலும் பல கோடி விற்பனை நடைபெறும் என கணிக்கப்படுகிறது.

seithichurul

Trending

Exit mobile version