தமிழ்நாடு

தமிழகத்தில் பள்ளிகள் எப்போது தொங்கப்படும்? கருத்துக்கேட்பு கூட்டம்

Published

on

தமிழகத்தில் பள்ளிகள் மீண்டும் திறப்பதற்கான பெற்றோர்களிடம் கருத்துக்கேட்பு கூட்டம் சென்னையில் நடைபெற்று வருகின்றது.

கடந்த ஆண்டு 2020ல் கொரோனா நோய்தொற்று காரணமாக பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் அனைத்தும் மூடப்பட்டன. தற்போது கொரோனா நோய்த்தொற்று குறைந்து உள்ள நிலையில் பல மாவட்டங்களில் கல்லூரிகள் தொங்கப்பட்டு வருகின்றன. அடுத்தக்கட்டமாக பள்ளிகள் திறக்கப்படுவது குறித்து பெற்றோர்களிடம் கருத்துக்கேட்பு கூட்டம் சென்னையில் நடைபெற்று வருகின்றது.

தகுந்த பாதுகாப்பு ஒழுங்கு முறைகள் பின்பற்றப்பட்டு இந்த கூட்டம் நடைபெற்று வருகின்றது. பெற்றோர்கள் அனைவருக்கும் துண்டு சீட்டுல கேள்விகள் கேக்கப்பட்டு உள்ளது. பெற்றோர்கள் தங்களது கருத்துக்களை பதிவு செய்தப்பின் கையெப்பம் இட்டு தர வேண்டும்.  பின்னர் முறையான பரிசீலனைக்கு பிறகு முடிவுகள் தெரிவிக்கப்பட உள்ளன.

மீண்டும் பள்ளிகள் திறப்பது பற்றி பெற்றோர்கள் கூறுகையில், மற்ற மாணவர்களை காட்டிலும் பொதுதேர்வு மாணவர்கள் அதிகம் பாதிக்கப்படுவதால் பள்ளிளை திறக்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளனர். 

seithichurul

Trending

Exit mobile version