தமிழ்நாடு

தமிழக அமைச்சர்களின் இலாகாக்கள் மாற்றம்.. யார் யாருக்கு எந்த துறை! முழு தகவல்கள்..!

Published

on

சென்னை சேப்பாக்கம் தொகுதி எம்எல்ஏ உதயநிதி ஸ்டாலின் இன்று அமைச்சராக பதவியேற்ற நிலையில் தமிழக அமைச்சரவையில் சில மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இன்று புதிய அமைச்சராக பதவி ஏற்ற உதயநிதி ஸ்டாலினுக்கு இளைஞர் நலன் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சர் பதவி ஒதுக்கப்பட்டுள்ளது. மேலும் ஒரு சில முக்கிய அமைச்சர்களின் இலாகாக்கள் மாற்றம் செய்யப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன. இந்த மாற்றம் குறித்து தற்போது பார்ப்போம்.

ஊரக வளர்ச்சித்துறை அமைச்சராக இருந்த பெரியகருப்பனுக்கு கூட்டுறவுத்துறை ஒதுக்கீடு

கூட்டுறவுத்துறை அமைச்சராக இருந்த ஐ.பெரியசாமிக்கு ஊரக வளர்ச்சித்துறை ஒதுக்கீடு

வனத்துறை அமைச்சராக இருந்த ராமசந்திரனுக்கு சுற்றுலாத்துறை ஒதுக்கீடு

இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர் பாபுவுக்கு கூடுதலாக சென்னை பெருநகர வளர்ச்சிக்குழுமத்துறை ஒதுக்கீடு

சுற்றுலாத்துறை அமைச்சராக இருந்த மதிவேந்தனுக்கு வனத்துறை ஒதுக்கீடு

நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜனுக்கு கூடுதலாக புள்ளியியல் துறை ஒதுக்கீடு

தமிழக அமைச்சரவை மாற்றத்தின் முழு விபரங்கள் இதோ:

seithichurul

Trending

Exit mobile version