தமிழ்நாடு

பள்ளி மாணவர்களுக்கு நற்செய்தி… தமிழக அமைச்சர் வெளியிட்ட புது உத்தரவு..!

Published

on

தமிழகப் பள்ளி மாணவர்களுக்கு தமிழக அமைச்சர் செங்கோட்டையன் ஒரு முக்கியமான நற்செய்தியை அறிவித்துள்ளார்.

தமிழக பள்ளி கல்வித் துறை அமைச்சர் செங்கோட்டையன் இன்று ஈரோடு மாவட்டம் கோபிச்செட்டிபாளையத்தில் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசினார். அப்போது அமைச்சர் கூறுகையில், “பள்ளியில் 6-ம் வகுப்பு முதல் 8-ம் வகுப்பு வரையில் படிக்கும் மாணவ மாணவியருக்கு டேப் வழங்குவதற்கான நடவடிக்கைகள் மத்திய அரசின் உதவியோடு எடுக்கப்பட்டு வருகின்றன. மேலும், ஆசிரியர்களுக்கான காலிப் பணியிடங்கள் குறித்த அட்டவணையும் விரைவில் வெளியிடப்படும்.

தற்போதைய சூழலில் பள்ளி மாணவர்கள் பள்ளிக்கு வந்து படிப்பது பாதுகாப்பானதா என்றால் அதுக்கான ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்ட பின்னரே தெரிவிக்கப்படும். அதுவரையில் பள்ளிகள் திறக்கப்படுவதற்கான வாய்ப்புகளே இல்லை. மேலும், மக்களது எண்ணங்கள், பிரதிபலிப்புகள் தமிழக முதல்வரிடம் கலந்து ஆலோசிக்கப்பட்ட பின்னரே அறிவிப்பு வெளியிடப்படும்.

தற்போது 10-ம் மற்றும் 12-ம் வகுப்பு மாணவர்களுக்கு பள்ளிகளில் வகுப்புகள் நடத்தப்பட்டு வருகின்றன. 6, 7, மற்றும் 8-ம் வகுப்பு மாணவர்களுக்கு தற்போது பள்ளிகள் திறக்கும் எண்ணம் இல்லை. தற்போதைய சூழலில் 10, 12-ம் வகுப்புகளில் 80 சதவிகிதத்துக்கும் குறையாமல் மாணவ, மாணவியர் வருகை புரிகின்றனர்” என்றார்.

 

Trending

Exit mobile version