தமிழ்நாடு

தமிழகத்தில் தலைவருக்கான வெற்றிடம் நிலவுகிறது.. ரஜினிகாந்த் பரபர பேட்டி!

Published

on

சென்னை: தமிழகத்தில் பெரிய அரசியல் தலைவருக்கான வெற்றிடம் நிலவிவருவதாக நடிகர் ரஜினிகாந்த் பேட்டியளித்துள்ளார்.

2.0 பட வெளியாகி ஓடி வருகிறது. 2.0 படம் இந்தியா முழுக்க நல்ல வரவேற்பை பெற்று இருக்கிறது. அதேபோல் நடிகர் ரஜினி தனது அரசியல் கட்சி தொடங்கும் அறிவிப்பை இந்த மாதம் வெளியிடுவார் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

நடிகர் ரஜினிகாந்த் தனது அரசியல் பார்வை குறித்து இந்தியா டுடே நாளிதழுக்கு பேட்டி அளித்துள்ளார்.

அவர் தனது பேட்டியில், நான் எப்போதும் அரசியலையும், சினிமாவையும் இணைத்து பார்க்க நினைத்ததில்லை. தொடக்கத்தில் இருந்தே இரண்டையும் தூரத்திலேயே வைத்து இருந்தேன். அரசியல் வேறு, சினிமா வேறு. சினிமா என்பது பொழுதுபோக்கிற்கு மட்டுமே.

எம்ஜிஆர் மிகச்சிறந்த அரசியல்வாதி. சினிமா நடிகர் அரசியலில் வெற்றிபெற்று மக்களுக்கு உதவ முடியும் என்பதை எம்ஜிஆர்தான் நிரூபித்துக் காட்டியது. சினிமாவில் இருந்து அரசியலுக்கு வரும் எல்லோருக்கும் அவர்தான் ரோல் மாடல். எனக்கும் அவர்தான் ரோல்மாடல். அதேபோல்தான் ஜெயலலிதாவும். அவர் மிகவும் வலுவான பெண்.

மோடி இந்த நாட்டிற்கு நல்லது செய்ய நினைக்கிறார். அவரின் நோக்கம் நல்லது. அவர் அதற்காகத்தான் பாடுபடுகிறார். அவ்வளவுதான் இப்போது சொல்ல முடியும்.

seithichurul

Trending

Exit mobile version