தமிழ்நாடு

தமிழகத்திற்கு ‘டிஜிட்டல் ஆளுமையில் சிறந்த மாநிலம் விருது – 2020’.. குடியரசுத் தலைவர் வழங்கினார்!

Published

on

டிஜிட்டல் ஆளுமையில் சிறந்த மாநிலம் விருதை தமிழக அரசுப் பெற்றுள்ளது. இந்து சமய அறநிலையத்துறைக்கு இந்த விருது கிடைத்துள்ளது.

டிஜிட்டல் இந்தியாவின் ஒரு அங்கமாக சிறந்த ஆளுமைக்கான விருது வழங்கப்பட்டு வருகிறது. அந்த வகையில், இந்தாண்டு தமிழகத்தின் இந்து சமய அறநிலையத்துறைக்கு இவ்விருது கிடைத்துள்ளது. இதுதொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள செயதிகுறிப்பில் கூறியிருப்பதாவது,

இந்து சமய அறநிலையத்துறையின் கோவில் மேலாண்மை திட்டம் குறித்த மென்பொருள் முன்மாதிரியான தயாரிப்பு என்ற பிரிவில் தேர்ந்தெடுக்கப்பட்ட தமிழ்நாடு இந்து சமய அறநிலையத்துக்கு ‘டிஜிட்டல் இந்தியா-2020 வெள்ளி விருது’ வழங்கப்பட்டது. தமிழக அரசு சார்பில் இந்த விருதை, இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேவூர் ராமச்சந்திரன் பெற்றுக்கொண்டார்.

இவ்விழாவில் மத்திய தொலைத்தொடர்பு, மின்னணு, தகவல் தொழில்நுட்பவியல் மற்றும் சட்டம், மற்றும் நீதித் துறை மந்திரி ரவி சங்கர் பிரசாத், மத்திய அரசின் மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்பவியல் துறை செயலாளர் அஜய் பிரகாஷ் ஷானே, டெல்லி தேசிய தகவலியல் மையத்தின் தலைமை இயக்குனர் டாக்டர் நீட்டா வர்மா, தமிழக அரசின் கூடுதல் தலைமைச்செயலாளர் ஹன்ஸ்ராஜ் வர்மா, தகவல் தொழில்நுட்பவியல் துறை மற்றும் தமிழ்நாடு தேசிய தகவலியல் மையத்தின் தொழில்நுட்ப இயக்குனர்கள் டாக்டர் எம்.பாலசுப்பிரமணியன், ஜே.அருண்குமார், டி.ஈஸ்வரன் ஆகியோர் கலந்துகொண்டனர்.

இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

seithichurul

Trending

Exit mobile version