இந்தியா

நாட்டிலேயே அதிக கள்ள நோட்டு: தமிழகத்துக்கு மூன்றாவது இடம்!

Published

on

நாட்டிலேயே அதிக கள்ள நோட்டுப் புழக்கம் உள்ள மாநிலமாக தமிழகம் மூன்றாம் இடத்தில் உள்ளதாக சட்ட அமலாக்க நிறுவனங்களின் ஆய்வறிக்கைகள் கூறுகின்றன.

இந்த அறிக்கைகளின் படி, 2019 ஜூன் 18-ஆம் தேதி வரையில் கைப்பற்றப்பட்டுள்ள மொத்த கள்ள நோட்டுகளின் மதிப்பு ரூ.5.05 கோடி. இந்தியாவிலேயே கள்ள நோட்டுப் புழக்கம் அதிகம் இருக்கும் மாநிலமாக உத்தராகண்ட் உள்ளது. மொத்தம் 102 வழக்குகள் கள்ள நோட்டுப் புழக்கம் தொடர்பாகப் உத்ராகண்டில் பதிவுசெய்யப்பட்டுள்ளன. இதில் தமிழகம் மூன்றாம் இடத்தில் உள்ளது. இந்த ஆண்டில் மட்டும் தமிழகத்தில் மொத்தம் 31 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு. ரூ.65.7 லட்சம் மதிப்பிலான கள்ள நோட்டுகள் கைப்பற்றப்பட்டுள்ளன.

கைப்பற்றப்படும் இந்த கள்ள நோட்டுகள் வங்கிக் கிளைகள் அல்லது கருவூலங்களால் அழிக்கப்படுகின்றன. கடந்த 2016 நவம்பர் மாதம் மோடி அரசால் பணமதிப்பழிப்பு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு. உயர் மதிப்பு நோட்டுகளான ரூ.500 மற்றும் ரூ.1000 ஆகியவை செல்லாதவையாக அறிவிக்கப்பட்டன. இந்த அதிரடி நடவடிக்கை கருப்புப் பணம் மற்றும் கள்ள நோட்டுப் புழக்கத்தைக் கட்டுப்படுத்தவே மேற்கொள்ளப்பட்டதாக மத்திய அரசு கூறியது குறிப்பிடத்தக்கது.

Trending

Exit mobile version