செய்திகள்

தமிழகத்தில் 6.26 கோடி வாக்காளர்கள்! இறுதி பட்டியல் வெளியீடு!

Published

on

தமிழக தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு இறுதி வாக்காளர் பட்டியலை வெளியிட்டார்.

தற்போது சட்டமன்ற தேர்தல் நெருங்கி வரும் நிலையில், தேர்தலுக்கான முன்ஏற்பாடு பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. கடந்த நவம்பர் மாதம் வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டது. வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்ப்பு, பெயர் நீக்கம், தொகுதி மாற்றம், முகவரி மாற்றம் போன்ற திருத்தங்கள் மேற்கொள்ள சிறப்பு முகாம் நடைபெற்றது. திருத்தங்கள் செய்வதற்காக ஆன்லைன் மூலமாகவும் நேரடியாகவும் விண்ணப்பங்கள் பெறப்பட்டன. இதன் மூலம், 29 லட்சத்து 72 ஆயிரத்து 899 விண்ணப்பங்கள் பெறப்பட்டது. அவற்றை பரிசீலனை செய்து தகுதியான விண்ணப்பங்கள் வாக்காளர் பட்டியலில் சேர்க்கப்பட்டது.

இந்தச் சூழலில் இறுதி வாக்காளர் பட்டியலை தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு வெளியிட்டார். தமிழகத்தில் வாக்காளர் பட்டியலில் இருந்து 5 லட்சம் பேரின் பெயர் நீக்கம் செய்யபட்டு உள்ளது. மேலும் புதிதாக 21.39 லட்சம் பேர் புதிதாக வாக்காளர் பட்டியலில் சேர்க்கப்பட்டு உள்ளனர். தமிழகத்தில் 6 கோடியே 26 லட்சம் வாக்காளர்கள் உள்ளதாக தேர்தல் அதிகாரி தெரிவித்துள்ளார்.

Trending

Exit mobile version