தமிழ்நாடு

10,12 வகுப்பு பொதுத்தேர்வு எப்போது? அமைச்சர் பதில்

Published

on

தமிழகத்தில் 10,12 பொதுத்தேர்வு குறித்து அமைச்சர் செங்கோட்டையன் பதிலளித்துள்ளார்.

தமிழகத்தில் கொரோனா பரவல் காரணமாக பள்ளிகள் திறக்ககாததால் காலாண்டு மற்றும் அரையாண்டு தேர்வுகள் நடைபெறவில்லை.  தற்போது கொரோனா பரவல் குறைந்த நிலையில், பொங்கலுக்கு பின்னர் பள்ளிகள் திறக்கப்பட அறிவிப்புகள் எதிர்பார்க்கப்பட்டன. இருப்பினும் இதுவரையில் எந்த அறிவிப்பும் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படவில்லை.

இந்நிலையில் பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது பேசிய அவர், தமிழகத்தில் பொதுத்தேர்வு நடைபெறும் என்பதில் எந்த மாற்றமும் இல்லை. ஆனால் தேர்தல் ஆணையம் தேர்தல் அறிவிப்புகளை வழங்கினால் மட்டுமே பொதுதேர்வு காலஅட்டவணையை வெளியிட முடியும் என்று தெரிவித்தார்.  மேலும், பொதுத்தேர்வு எழுதும் மாணவர்களுக்கு ஏதுவாக சிறப்புவகுப்புகள் நடைபெறும் என்றும் இதர வகுப்புகளுக்கு பள்ளிகள் திறப்பு குறித்து விரைவில் அறிவிக்கப்படும் என்றும் தெரிவித்தார்.  முன்னதாக, புதுச்சேரியில் இன்று பள்ளிகள் திறக்கப்பட்டுள்ள நிலையில் தமிழகத்தில் எப்போது திறக்கப்படும் என பெற்றோர்கள் மற்றும் ஆசிரியர்கள் ஆவலுடன் இருக்கின்றனர்.

Trending

Exit mobile version