தமிழ்நாடு

ஷாருக்கான், சானியா மிர்சா வரிசையில் தமிழக மருத்துவருக்கு துபாயின் கோல்டன் விசா!

Published

on

துபாயில் வசிக்கும் தமிழக ஆயுர்வேத மருத்துவருக்கு துபாயின் கோல்டன் விசா வழங்கப்பட்டுள்ளது.

துபாயில் கோல்டன் விசா என்பது 10 ஆண்டுகளுக்கான ஒரு முறை விசா ஆகும். வெளிநாடுகளில் இருந்து துபாய் வருவோருக்கு உதவும் வகையில் இந்த கோல்டன் விசா வழங்கப்படுகிறது. இந்த கோல்டன் விசா பெறுபவர்கள் துபாய் அரசால் கவுரவமாகப் பார்க்கப்படுவர், நடத்தப்படுவர். தொழிலதிபர்களைப் பொறுத்த வரையில் 20 கோடிக்கும் அதிகமாக முதலீடு செய்பவர்களுக்குத் தான் கோல்டன் விசா வழங்கப்படும்.

இதேபோல், பல முக்கியப் பிரபலங்களுக்கு இந்த கோல்டன் விசா வழங்கப்பட்டு வருகிறது. இந்தியாவில் ஷாருக்கான், சஞ்சய் தத், சானியா மிர்சா ஆகியோருக்கு இந்த கவுரவ கோல்டன் விசா வழங்கப்பட்டுள்ளது. இதேபோல், துபாயில் வசிக்கும் இந்தியாவைச் சேர்ந்த வேறு 2 மருத்துவர்களுக்கும் இந்த கோல்டன் விசா வழங்கப்பட்டு இருக்கிறது.

இந்த வரிசையில் தமிழ்நாட்டில் திண்டிவனத்தில் பிறந்த ஆயுர்வேத மருத்துவர் நஸ்ரின் பேகம். கடந்த 2013-ம் ஆண்டு முதல் துபாயில் மருத்துவர் ஆக உள்ளார். இவருக்குத் தான் தற்போது துபாயின் கவுரவ கோல்டன் விசா வழங்கப்பட்டுள்ளது. தமிழ்நாட்டிலிருந்து இந்த கவுரவத்தைப் பெறும் முதல் நபர் ஆக உள்ளார் நஸ்ரின் பேகம்.

Trending

Exit mobile version