தமிழ்நாடு

இதென்ன புதுசா இருக்கு.. அட நம்ம தமிழ்நாடு சிஎம் டிபியா இது!

Published

on

சென்னை: தமிழ்நாடு முதல்வரின் அதிகாரப்பூர்வ டிவிட்டர் கணக்கில் வைக்கப்பட்டு இருக்கும் புதிய முகப்புப்படம் பலரையும் கவர்ந்து இருக்கிறது.

தமிழ்நாடு முதல்வருக்கு அதிகாரப்பூர்வ டிவிட்டர் கணக்கு இணையத்தில் இயங்கி வருகிறது. @CMOTamilNadu என்ற இந்த கணக்கு மிகவும் பிரபலம். இதை 1 லட்சம் பேர் வரை பாலோ செய்து வருகிறார்கள். தற்போது இந்த கணக்கு தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியின் கட்டுப்பாட்டில் உள்ளது.

திடீர் என்று இந்த புகைப்படம் மாற்றப்பட்டுள்ளது. பழைய புகைப்படத்திற்கு பதிலாக தற்போது மறைந்த முதல்வர் ஜெயலலிதா இருக்கும் புகைப்படம் வைக்கப்பட்டு இருக்கிறது.

அதன் மேல்பக்கம் அயர்ன்லேடி என்று எழுதப்பட்டு இருக்கிறது. கீழ் பக்கம், வீ மிஸ் யூ அம்மா என்று எழுதப்பட்டுள்ளது.

இந்த புதிய டிபி பெரிய வைரலாகி உள்ளது. ஆனால் இப்படி திடீர் என்று மீண்டும் ஜெயலலிதா புகைப்படம் வைக்கப்பட்டதன் காரணம் என்னவாக இருக்கும் என்று சிலர் கேள்வி எழுப்பி உள்ளனர்.

seithichurul

Trending

Exit mobile version