தமிழ்நாடு

வீடில்லா ஏழை மக்களுக்குக் கான்கிரீட் வீடுகள் கட்டித்தரப்படும்- தமிழக முதல்வர் அறிவிப்பு

Published

on

வீடில்லா ஏழை மக்களுக்கு கான்கிரீட் வீடுகள் கட்டித் தரப்படும் என தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார்.

தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் நெருங்கி வருவதை அடுத்து தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி தமிழகம் முழுவதும் பயணித்து வருகிறார். இந்த வகையில் இன்று விருதுநகர், மதுரை ஆகிய பகுதிகளில் போட்டியிடும் கட்சி மற்றும் கூட்டணிக் கட்சி வேட்பாளர்களுக்கு ஆதரவாக பிரசாரம் மேற்கொண்டார் முதல்வர். அப்போது முதல்வர் பேசுகையில், “திமுக தலைவர் ஸ்டாலின் கூறும் அனைத்தும் பொய் வாக்குறுதிகள்.

திமுக வாக்குறுதிகள் அனைத்துமே பொய் தான். அதிமுக ஆட்சியில் தமிழகத்தில் மின்வெட்டே இல்லாத அளவுக்கு மின்மிகை மாநிலமாகத் திகழ்கிறது. சிவகாசியில் பட்டாசுத் தொழிற்சாலைகள் தொடர்ந்து இயங்க அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. நம் நாட்டிலேயே பயங்கரவாதத்தை ஒழிக்க தேவையான அத்தனை சக்திகளும் பிரதமர் மோடியிடம் மட்டுமே உள்ளன.

தமிழகம் முழுவதும் உள்ள வீடு இல்லா மக்களுக்கு கான்கிரீட் வீடுகள் கட்டித் தரப்படும். நானும் ஒரு விவசாயி என்பதால் விவசாயிகளின் மன ஓட்டத்தை அறிந்து விவசாயிகளின் பயிர்க்கடனை தள்ளுபடி செய்துள்ளேன்” எனக் குறிப்பிட்டார்.

Trending

Exit mobile version