செய்திகள்

ஜெயலலிதா நினைவிடத்தை முதல்வர் எடப்பாடி திடீர் ஆய்வு

Published

on

மெரினா கடற்கரையில் உள்ள மறைந்த ஜெயலலிதா நினைவிடத்தை முதல்வர் பழனிச்சாமி ஆய்வு செய்தார்.

மறந்த முதல்வர் ஜெயலலிதாவுக்கு சென்னை மெரினா கடற்கரையில் எம்.ஜி.ஆர் வளாகத்தில் நினைவிடம் அமைப்பதற்கு தமிழக அரசு சார்பில் 9 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது. இந்நிலையில் கடந்த 2018 ஆம் ஆண்டு முதல்வர் எடப்பாடி பழனிசாமி மற்றும் துணை முதல்வர் பன்னீர்செல்வம் நினைவிடம் அமைப்பதற்கு அடிக்கல் நாட்டினர். அதன் பிறகு கட்டுமான பணிகள் தீவிரமாக  நடைபெற்று வந்தது. நினைவிடமானது பீனிக்கஸ் பறவையின் வடிவில் அமைவது  குறிப்பிடத்தக்கது. நினைவிடம் அமைப்பதற்காக பிரத்யேகமான இயந்திரங்கள் துபாயில் இருந்து வருவிக்கப்பட்டன. இத்தாலி மார்பிள் மற்றும் பளிங்கு கற்கள் ஆகியவை பதிக்கப்பட்டு எழில்மிகு தோற்றத்தில் வடிவமைக்கப்பட்டு வருகிறது. தற்போது 90 சதவீத பணிகள் நிறைவடைந்தன. இந்த நிலையில் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி நேரில் சென்று இறுதிகட்ட பணிகளை ஆய்வு செய்தார்.  அப்போது ஜெயலலிதா நினைவிடத்தில் முதல்வர் மலர் தூவி அஞ்சலி செலுத்தினார். அப்போது முதல்வர் செய்தியாளர்களைச் சந்தித்து பேசுகையில், இந்த நினைவிடம் பிப்ரவரி முதல் வாரத்தில் தமிழக அரசிடம் ஒப்படைக்கப்படும் எனக் கூறினார். ஜெயலலிதாவின் பிறந்தநாள் அன்று நினைவிடம் திறக்கப்படும் எனவும் பிரதமர் மோடியை நினைவிடம் திறப்பதற்கு அழைப்பு விடுக்க போவதாகவும் கூறினார்.

முதல்வர் பழனிச்சாமியுடன் அமைச்சர் ஜெயக்குமார், ஆதிராஜாராம், வேளச்சேரி அசோக், ஆர்.எஸ்.ராஜேஷ் ஆகியோர் கட்டட பணிகளை மேற்பார்வை செய்தனர்.

 

Trending

Exit mobile version