தமிழ்நாடு

நிறுத்துங்கள் என்றால் எங்கிருந்து மின்சாரம் கிடைக்கும்: கூடங்குளம் அணுக்கழிவு மையத்துக்கு தமிழிசை ஆதரவு!

Published

on

திருநெல்வேலி மாவட்டம் கூடங்குளத்தில் இரண்டு அணு உலைகள் செயல்பட்டு வருகிறது. இந்நிலையில் அந்த அணு உலையில் இருந்து வெளியாகும் கழிவுகளை கொட்ட நிரந்தர அணுக்கழிவு மையம் அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது. இதற்கு தமிழக எதிர்க்கட்சிகள் தன்னார்வு நிறுவனங்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து போராட்டங்களுக்கு அழைப்பு விடுத்துள்ளது.

இந்நிலையில் தமிழக பாஜக தலைவர் தமிழிசை இந்த அணுக்கழிவு மையம் அமைக்க ஆதரவு தெரிவித்து செய்தியாளர்களை சந்தித்துள்ளார். அப்போது, அரசியல் கட்சிகள் இந்த அணுக்கழிவு மையத்தால் பெரிய ஆபத்து என்பது போன்று போராட்டங்களை அறிவிப்பது, இயற்கையாக மக்களோடு அரசு நடத்தும் கலந்துரையாடல் முழுமையாக முற்று பெறாதோ என்றே எண்ணத்தோன்றுகிறது.

மின்சாரம் நிச்சயமாக நமக்கு வேண்டும், இதில் கிடைக்கும் 1000 மெகா வாட் மின்சாரத்தில் பெரும் பகுதி நமக்கு கிடைக்கிறது. இந்த கழிவுகளை ஒன்றும் செய்யாதீர்கள் உடனடியாக நிறுத்துங்கள் என்றால் எங்கிருந்து மின்சாரம் கிடைக்கும். ஆகவே ஆக்கப்பூர்வாமாக நேர்மறையான சித்தனைகளை நாம் கொள்ளவேண்டும் என்பதே எனது கருத்து என்றார் தமிழிசை.

seithichurul

Trending

Exit mobile version