சினிமா

சின்மயிக்கு தமிழிசை ஆதரவு: சூடுபிடிக்கும் வைரமுத்து விவகாரம்!

Published

on

சமூக வலைதளத்தில் பிரபல கவிஞர் வைரமுத்துவுக்கு எதிராக பாலியல் குற்றச்சாட்டுகளை முன்வைத்து வரும் பிரபல பாடகி சின்மயிக்கு ஆதரவாக தமிழக பாஜக தலைவர் தமிழிசை சௌந்தர்ராஜன் டுவிட்டரில் கருத்து தெரிவித்துள்ளார்.

சமீப காலமாக திரைத்துறையில் நடக்கும் பாலியல் அத்துமீறல்கள் வெளிச்சத்துக்கு வந்துகொண்டு இருகிறது. இந்நிலையில் முன்னதாக பெங்களூரை சேர்ந்த சந்தியா மேனன் என்ற பெண் பத்திரிக்கையாளர் வைரமுத்துவால் பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளான பெண் ஒருவர் கூறியதை பதிவிட்டு, அதனை சின்மயில் ரீட்வீட் செய்து பரபரப்பாக்கினார்.

அதன் பின்னர் பாடகி சின்மயியே தான் வைரமுத்துவால் பாலியல் உறவுக்கு அழைக்கப்பட்டு மறுத்ததால் மிரட்டலுக்கு ஆளானதை டுவிட்டரில் கூறி பரபரப்பை உச்சத்துக்கு கொண்டு சென்றார். அதன் பின்னரும் தொடர்ந்து வைரமுத்து மீதும் திரைத்துறையில் உள்ள சிலர் மீதும் பாலியல் குற்றச்சாட்டுகள் வந்தன.

இதனையடுத்து பாடகி சின்மயிக்கு பல்வேறு தரப்பில் இருந்து ஆதரவு பெருகி வருகிறது. ஆனால் தமிழ் ஊடகங்கள் இதனை முக்கிய விஷயமாக கருதவில்லை. திரைத்துறையை சேர்ந்த முக்கிய நபர்கள் கூட இதில் கருத்து கூறவில்லை. இந்நிலையில் பாஜக தமிழக தலைவர் தமிழிசை இந்த விவகாரத்தில் கருத்து கூறி சின்மயிக்கு ஆதரவு தெரிவித்துள்ளார். இதனால் இந்த விவகாரம் தற்போது தான் சூடுபிடிக்க ஆரம்பித்துள்ளது.

தமிழிசை தனது டுவிட்டர் பக்கத்தில், பாடகி சின்மயின் கருத்து கவனிக்கப்படவேண்டியது.நிச்சயம் விசாரிக்கப்படவேண்டியது. அரசியல்வாதிகள் அனைவரையும் விமர்சனம் செய்யும் திரைத்துறையினர் நடிகர்கள் தங்கள் துறையில் நடந்துள்ள தவறுகளை கண்டு கொள்ளாதது ஏன்? என கேள்வி எழுப்பியுள்ளார்.

seithichurul

Trending

Exit mobile version