தமிழ்நாடு

தமிழிசை செளந்திரராஜன் தாயார் காலமானார்: தலைவர்கள் இரங்கல்!

Published

on

தெலங்கானா மற்றும் புதுவை ஆளுநர் தமிழிசை சௌந்தர்ராஜன் அவர்களின் தாயார் கிருஷ்ணகுமாரி காலமானதாக செய்திகள் வெளியாகியுள்ளது.

புதுச்சேரி மற்றும் தெலுங்கானா மாநில ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் அவர்களின் தாயார் கிருஷ்ணகுமாரி உடல் நலக்குறைவு காரணமாக கடந்த சில ஆண்டுகளாக சிகிச்சை பெற்று வந்தார். இந்த நிலையில் சிகிச்சை பலனின்றி தற்போது அவர் காலமானதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அவருக்கு வயது 76.

இதனை அடுத்து தமிழிசை சவுந்தரராஜன் மற்றும் அவரது குடும்பத்தினர் பெரும் சோகத்தில் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. தமிழிசை சௌந்தரராஜன் அவர்களின் தாயார் கிருஷ்ணகுமாரி அவர்களின் மறைவை அடுத்து தமிழக அரசியல் தலைவர்கள் மற்றும் தேசிய தலைவர்கள் அவரது குடும்பத்திற்கு ஆறுதல் கூறி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

காங்கிரஸ் கட்சியின் பழம்பெரும் தலைவர்களில் ஒருவரான குமரி அனந்தனின் மனைவியான கிருஷ்ணகுமாரி அவர்கள் மறைவுக்கு காங்கிரஸ் கட்சியும் தனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

தமிழிசை சௌந்தரராஜன் அவர்களின் தாயார் கிருஷ்ணகுமாரி மறைவிற்கு முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி அவர்கள் தனது டுவிட்டர் பக்கத்தில் இரங்கல் தெரிவித்துள்ளார் அதில் அவர் கூறியிருப்பதாவது: தெலுங்கானாஆளுநர்,புதுச்சேரி துணைநிலை ஆளுநர் தமிழிசை செளந்திரராஜன் அவர்களின் தாயார் திருமதி. கிருஷ்ணகுமாரி அவர்கள் காலமான செய்தியறிந்து மிகவும் வேதனையடைந்தேன். அவரின் ஆன்மா இறைவன் திருவடி நிழலில் இளைப்பாற இறைவனை பிரார்த்திப்பதோடு, அன்பு சகோதரிக்கு என் ஆறுதல்களை தெரிவித்துக்கொள்கிறேன்.

தமிழிசை சௌந்தரராஜன் அவர்களின் தாயார் கிருஷ்ணகுமாரி மறைவிற்கு மத்திய அமைச்சர் எல்.முருகன் தனது இரங்கல் செய்தியில், ‘தெலங்கானா ஆளுநரும், புதுச்சேரி துணைநிலை ஆளுநருமான திருமதி. டாக்டர். தமிழிசை செளந்திரராஜன் அவர்களின் தாயார் திருமதி கிருஷ்ணகுமாரி அவர்களின் மறைவுச் செய்தி அறிந்து வேதனையும், அதிர்ச்சியும் அடைந்தேன்.

seithichurul

Trending

Exit mobile version