தமிழ்நாடு

வைரமுத்துவை விமர்சிக்க கவிஞராக மாறிய தமிழிசை!

Published

on

பிரபல கவிஞர் வைரமுத்து மீதான பாலியல் குற்றசாட்டு விவகாரம் நாளுக்கு நாள் சூடுபிடித்து வருகிறது. சின்மயி வைரமுத்து மீது பாலியல் குற்றச்சாட்டு வைத்ததில் இருந்து சின்மயிக்கு பல தரப்பில் இருந்தும் ஆதரவு பெருகி வருகிறது.

இதனையடுத்து சின்மயிக்கு பாஜக தலைவர் தமிழிசை ஆதரவு தெரிவித்தார். ஆனால் வைரமுத்து தன் மீதான குற்றச்சாட்டை மறுத்தும், வழக்கு தொடர்ந்தால் அதனை சந்திக்க தயாராக உள்ளதாகவும் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், என் மீது சுமத்தப்பட்டு வரும் குற்றச்சாட்டுகள் எல்லாம் முழுக்க முழுக்க பொய்யானவை. முற்றிலும் உள்நோக்கம் உடையவை. அவை உண்மையாக இருந்தால் சம்மந்தப்பட்டவர்கள் என்மீது வழக்குத் தொடுக்கலாம். சந்திக்க காத்திருக்கிறேன்.

மூத்த வழக்கறிஞர்களோடும், அறிவுலகத்தின் ஆன்றோர்களோடும் கடந்த ஒருவார காலமாக ஆழ்ந்து ஆலோசித்து வந்தேன். அசைக்க முடியாத ஆதாரங்களை தொகுத்து திரட்டி வைத்திருக்கிறேன். நீங்கள் வழக்கு போடலாம், சந்திக்க காத்திருக்கிறேன். நான் நல்லவனா, கெட்டவனா என்று இப்போது யாரும் முடிவு செய்ய வேண்டாம். நீதிமன்றம் சொல்லட்டும். நீதிக்குத் தலை வணங்குகிறேன் என கூறியுள்ளார்.

இந்நிலையில் கவிஞர் வைரமுத்துவை அவரது ஸ்டைலில் கவிதை நடையிலேயே விமர்சித்துள்ளார் பாஜக தமிழக தலைவர் தமிழிசை சௌந்தரராஜன். அதில், சந்தி சிரித்தபின் சந்திக்கிறேன் என்கிறார் கவிஞர். நிந்திக்க அவகாசம் கொடுத்து ஒரு வாரம் கழித்து சிந்திக்க வேண்டிய அவசியம் என்ன? சந்தக்கவிஞர் மீது சந்தேகமே அதிகரிக்கிறது என கூறியுள்ளார்.

Trending

Exit mobile version