தமிழ்நாடு

மாணவி சோபியா மீதான புகாரை தமிழிசை திரும்பப் பெற வேண்டும்: மு.க.ஸ்டாலின்

Published

on

தூத்துக்குடி விமான நிலையத்தில் சென்ற 3-ம் தேதி பாஜக் எதிராகக் கோஷம் எழுப்பியதாகச் சோபியா என்ற மாணவியுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்ட தமிழிசை சவுந்தர்ராஜன் அவர் மீது புதுக்கோட்டை காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.

எனவே சோபியாவின் பாஸ்போர்ட்டினை பரிமுதல் செய்தது மட்டும் இல்லாமல் அவரைக் காவல் துறை சிறையிலும் அடைத்தது. அடுத்த நாளே தூத்துக்குடி நீதிமன்றம் சோபியாவிற்கு நிபந்தனையின்றி ஜாமின் அளித்தது.

ஆனால் பழைய பாஸ்போர்ட்டினை தான் காவல் துறை பரிமுதல் செய்து இருந்தது என்றும் புதிய பாஸ்போர்ட்டினை காவல் நிலையத்தில் ஒப்படைக்குமாறும் சோபியாவின் அப்பாவிற்குச் சம்மன் அனுப்பப்பட்டுள்ளது.

இது குறித்து ஸ்டாலின் வெளியிட்ட டிவிட்டர் பதிவில்

#பாசிசபாஜகஒழிக என்று முழக்கமிட்ட மாணவி சோபியாவின் பாஸ்போர்ட்டை பறிமுதல் செய்யத் தமிழக அரசு முயற்சிப்பது கண்டனத்துக்குரியது.

நீதிமன்றமே நிபந்தனை விதிக்காத நிலையில், காவல்துறை ஆய்வாளர் பாஸ்போர்ட்டை சரண்டர் செய்யக்கோரி “சம்மன் அனுப்பி” மாணவியைப் பழிவாங்க துடிப்பது வேதனையளிக்கிறது!

மாணவி சோபியா கனடா சென்று மேற்படிப்பினை தொடர தமிழக அரசு அவர் மீது போடப்பட்ட வழக்கினை திரும்பப் பெற வேண்டும்.

மேலும், “பொதுவாழ்வில் விமர்சனங்கள் ஆரோக்கியமானவை” என்பதை உணர்ந்து தமிழகப் பாஜக தலைவர் தமிழிசை அவர்களும் தான் அளித்த புகாரை திரும்பப் பெற வேண்டுமெனக் கேட்டுக் கொள்கிறேன்! என்றும் குறிப்பிட்டுள்ளார்.

seithichurul

Trending

Exit mobile version