தமிழ்நாடு

தமிழிசை மேடம் அது அர்ச்சனா விருது இல்லை, அர்ஜுனா விருது: டுவிட்டர் காமெடி!

Published

on

தமிழக பாஜக தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் தனது டுவிட்டர் பக்கத்தில் அர்ஜுனா விருதை அர்ச்சனா விருது என குறிப்பிட்டது நகைப்பை ஏற்படுத்தியுள்ளது.

துரோணாச்சாரியார் விருது மற்றும் அர்ஜுனா விருதுகள் வென்றோரின் பெயர் பட்டியல் நேற்று அறிவிக்கப்பட்டது. இதில் டேபிள் டென்னிஸில் சாதனை படைத்த தமிழகத்தை சேர்ந்த சத்யன்ஞான சேகரன் பெயரும் இடம்பெற்றது. இதற்கு பல தலைவர்கள் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில் இதற்கு வாழ்த்து தெரிவிக்க டுவிட்டரில் பதிவிட்ட தமிழக பாஜக தலைவர் தமிழிசை, டேபிள் டென்னிஸ் சாதனையாளர் தமிழகத்தை சார்ந்த சத்யன்ஞான சேகரன் அவர்களுக்கு தேசியவிளையாட்டு அர்ச்சனாவிருது வழங்கியதை பாராட்டி அவர் மேலும் பல உலக சாதனைகள் படைக்க தமிழக பாஜக சார்பில் வாழ்த்துக்கள். தேசியவிருதுகள், அர்ச்சனா விருதுகள் துரோணாச்சாரியார் விருதுகள் பெறும் அனைவருக்கும் வாழ்த்து என தெரிவித்தார்.

இதில் தமிழிசை அர்ஜுனா விருதை அர்ச்சனா விருது என தவறாக குறிப்பிட்டதை இணையதளத்தில் நெட்டிசன்கள் கிண்டலடித்து வருகின்றனர்.

seithichurul

Trending

Exit mobile version