தமிழ்நாடு

புதுவை ஆளுனர் கிரண்பேடி திடீர் நீக்கம்: கூடுதல் பொறுப்பேற்கிறார் தமிழிசை!

Published

on

கடந்த சில ஆண்டுகளாக புதுவை மாநில ஆளுநராக இருந்த கிரண்பேடி திடீரென நீக்கப்பட்டு உள்ளதாகவும் அவருக்கு பதிலாக தெலுங்கானா மாநில ஆளுநராக தற்போது பதவியில் இருக்கும் தமிழிசை சவுந்தரராஜன் கூடுதல் பொறுப்பாக புதுவை துணைநிலை ஆளுநர் ஆகவும் இருப்பார் என்றும் அறிவிக்கப்பட்டு உள்ளதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

புதுவை மாநிலத்தில் கடந்த சில ஆண்டுகளாகவே முதல்வர் நாராயணசாமி அவர்களுக்கும் துணைநிலை ஆளுநர் கிரண்பேடி அவர்களுக்கு மோதல் போக்கு நீடித்து வந்தது. இந்த நிலையில் சற்று முன்னர் குடியரசு தலைவர் அதிரடி உத்தரவு ஒன்றை பிறப்பித்துள்ளார்


இதன்படி புதுவை மாநில துணை நிலை ஆளுநர் பதவியிலிருந்து கிரண்பேடி நீக்கப்படுகிறார். இதனை அடுத்து தெலுங்கானா மாநில கவர்னராக இருக்கும் தமிழிசை சௌந்தர்ராஜன் அவர்கள் புதுவை மாநிலத்தையும் கூடுதலாக கவனிப்பார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. குடியரசு தலைவரின் இந்த உத்தரவால் புதுவை மாநிலத்தில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது

author avatar
seithichurul

Trending

Exit mobile version