தமிழ்நாடு

சோபியா விவகாரம் நடந்தது என்ன? தமிழிசை விளக்கம்!

Published

on

விமானத்தில் தமிழிசை முன்னிலையில் பாஜகவுக்கு எதிராக கூச்சலிட்ட மாணவி சோபிய கைது செய்யப்பட்ட விவகாரம் பூதாகரமாகியுள்ள நிலையில் நடந்தவை குறித்து தமிழக பாஜக தலைவர் தமிழிசை விளக்கம் அளித்துள்ளார்.

தமிழிசை தனது விளக்கத்தில், நேற்று இண்டிகோ விமானத்தில் எனக்கு பின்னே தான் சோபியாவின் சீட் இருந்தது. அப்போது அவர் என்னை கடந்து சென்றபோது என்னைப் பார்த்து பாரதிய ஜனதா கட்சி பாசிச ஆட்சி ஒழிக என்று கோஷமிட்டனர். நாகரிகம் கருதி விமானத்திற்குள் நான் எதுவும் பேசவில்லை.

அதன் பின்னர் விமான வரவேற்பறையில் நான் காத்திருந்தபோது, என்னைப் பார்த்து முறைத்துக்கொண்டே போனார் சோபியா. அப்போது நான் விமானத்திற்குள் இப்படி கோஷமிடுவது சரியா என்று கேட்டேன், எனக்கு பேச்சுரிமை இருக்கிறது, நான் பேசுவேன் என்று கூறினார். மேலும் அவர் சொல்ல முடியாத வார்த்தைகளையும் உபயோகித்தார். உங்களுக்குப் பேச்சுரிமை இருந்தாலும், விமானத்தில் பயணிகளுக்கு இடையூறாகப் பேசியது தவறு என்று அவரிடம் சொன்னேன். இருந்தாலும் அவர் நிறுத்தாமல் தொடர்ந்து பேசிக்கொண்டிருந்தார்.

சாதாரண பயணியை போல சோபியா பேசவில்லை. அவருக்கு பின்னார் ஏதாவது ஒரு இயக்கம் இருக்கலாம் என்ற சந்தேகம் எனக்கு வந்தது. விமானத்தில் உள்ளே இருந்துகொண்டு அவர் டுவிட்டரில் சில பதிவுகளை இட்டுள்ளார். அதனை பார்க்கும் போது இது திட்டமிட்டு நடத்தப்பட்டுள்ளது என தெரிகிறது. மேலும் தான் சட்டத்துக்கு உட்பட்டு செயல்பட்டதாகவும் எந்த தவறும் செய்யவில்லை எனவும், சோபியா தவறு செய்யவில்லை என்றால் விடுதலையாகட்டும் எனவும் தெரிவித்தார்.

author avatar
seithichurul

Trending

Exit mobile version