தமிழ்நாடு

உங்களுடைய 3 மாத வருமானத்தை அனுப்பலாமே! கேள்வி கேட்ட நெட்டிசனுக்கு தமிழிசை பதிலடி!

Published

on

நாடே கொரனோ தொற்றால் தவித்துக்கொண்டிருக்கும் நிலையில் உங்களுடைய மூன்று மாத சம்பளத்தை பிரதமர் நிவாரண நிதிக்கு வழங்கலாமே என தமிழிசை சவுந்தரராஜன் அவர்களுக்கு நெட்டிசன் ஒருவர் கேட்ட கேள்விக்கு பதிலடி கொடுக்கப்பட்டு உள்ளது

நெட்டிசன் ஒருவர் தனது டுவிட்டர் பக்கத்தில் ’வாழ்வாதாரத்தை விட உயிர் முக்கியம் என்று கூறும் ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் அவர்களே, உங்களுடைய மூன்று மாத வருமானத்தை பிரதமர் நலநிதி அனுப்பலாமே? என்று கேள்வி எழுப்பி இருந்தார்

அதற்கு தமிழிசை சௌந்தரராஜன் அவர்கள் கொடுத்த பதிலடி பின்வருமாறு: கொரோனா நிதி பங்களிப்பாக எனது ஊதியத்திலிருந்து மார்ச், 2020 லிருந்து மாதம் 1 இலட்சம் வீதம் இதுவரை 12 இலட்சம் ரூபாய் கொரோனா நிதிக்கு எனது பங்களிப்பாக பிரதமர் நிதிக்கு அனுப்பி வருகிறேன். மேலும் எனது ஒரு மாத முழு ஊதியத்தையும் தெலுங்கானா முதலமைச்சர் நிதிக்கு வழங்கியுள்ளேன்’ என்று குறிப்பிட்டுள்ளார்.

ஒரு டுவிட்டர் பக்கம் இருந்தால் யாரை வேண்டுமானாலும் டேக் செய்து என்ன வேண்டுமானாலும் கேள்வி கேட்பதா? என அந்த நெட்டிசனுக்கு பலர் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.

 

 

 

Trending

Exit mobile version