உலகம்

அமெரிக்காவின் பென்டகனில் மாபெரும் பொறுப்பு… தமிழரைத் தேடி வந்த பதவி!

Published

on

அமெரிக்காவின் தலைமை ராணுவ மையம் ஆன பென்டகனில் தமிழர் ஒருவருக்கு உயர் பதவி தானாகவே தேடி வந்துள்ளது.

தமிழகத்தில் திருச்சி மாவட்டம் லால்குடியைச் சேர்ந்தவர் ராஜு. இவர் பள்ளிப்படிப்பை லால்குடியில் நிறைவு செய்திருந்தாலும் கல்லூரி மற்றும் மேற்படிப்புகளை அமெரிக்காவுக்குச் சென்று படித்துள்ளார். படிப்பில் சிறந்து விளங்கிய ராஜு அமெரிக்காவில் உள்ள பல மென்பொருள் நிறுவனங்களிலும் பணியாற்றி உள்ளார். பல நிறுவனங்களில் வேலை செய்திருந்தாலும் இவரது தகவல் தொழில்நுட்ப திறன் அமெரிக்க அரசாங்கம் வரை எட்டியுள்ளது.

அமெரிக்காவின் ராணுவ தலைமையகம் என அழைக்கப்படும் பென்ட்கனில் தகவல் தொடர்பு உயர் அதிகாரி பதவிக்கான காலியிடம் ஏற்பட்டுள்ளது. பொதுவாகவே அந்தப் பதவிக்கு திற்மை உடையவர்கள் விண்ணப்பிக்க வேண்டும். ஆனால், ராஜு விண்ணப்பிக்கவே இல்லை. அவரது திறனை அறிந்த அமெரிக்க அரசு அவருக்கு அந்த உயர் பதவியை தானாகவே முன் வந்து அளித்துள்ளது. இதன் மூலம் அமெரிக்க ராணுவத்தில் மூன்று நட்சத்திரங்கள் பெறும் அதிகாரிக்கு சமமான அந்தஸ்தும் உரிமையும் ராஜுவுக்கு வழங்கப்படும்.

தமிழர் ஒருவருக்கு அமெரிக்க ராணுவத்தில் தலைமை கிடைத்திருப்பதற்கு அவரது சொந்த ஊர் மக்கள் பாராட்டுகளைத் தெரிவித்துள்ளனர். மேலும், ராஜு மூலம் தங்களது கிராமமே பெருமைப்படுவதாகவும் அந்த ஊர் மக்கள் தெரிவித்துள்ளனர். ராஜுவின் மனைவி பிருந்தா. பிருந்தாவும் தகவல் தொழில்நுட்ப வல்லுநர் தான். பிருந்தா அமெரிக்காவின் அரசுத் துறையான சுகாதாரத் துறையில் தகவல் தொடர்பாளராகப் பணியாற்றி வருகிறார். ராஜு- பிருந்தா தம்பதியருக்கு இரண்டு மகன்கள் உள்ளனர்.

இவர்களில் அஸ்வின், அபிஷேக் ஆகிய இரு மகன்களும் கர்நாடக சங்கீதத்தில் தேர்ந்தவர்களாக உள்ளனர். அமெரிக்காவில் கர்நாடக இசைக் கச்சேரிகளை இந்த இரு மகன்களும் நடத்தி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Trending

Exit mobile version