தமிழ்நாடு

வெளிநாட்டு தமிழர்களுக்காக புது வாரியம்: முதல்வர் ஸ்டாலின் அறிவிப்பு!

Published

on

வெளிநாட்டு தமிழர்களுக்காக புலம்பெயர் தமிழர் வாரியம் ஒன்று அமைக்க இருப்பதாக தமிழக முதல்வர் முக ஸ்டாலின் அவர்கள் சற்றுமுன் அறிவித்துள்ளார்.

தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் அவர்கள் பதவி ஏற்ற நாள் முதல் பல்வேறு அதிரடி அறிவிப்புகளை வெளியிட்டு வருகிறார் என்பதும், அவரது அறிவிப்புகள் ஒவ்வொன்றும் மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்று வருகிறது என்பதும் தெரிந்ததே. அந்த வகையில் தமிழக மக்களுக்கு பல்வேறு நலத்திட்டங்களை செய்த தமிழக முதல்வர் தற்போது வெளிநாட்டு தமிழர்களின் நலன் காக்க புலம்பெயர் தமிழர் வாரியம் என்ற ஒரு அமைப்பை அமைத்து உள்ளார்

தமிழக அரசின் ரூபாய் 5 கோடி முன்பணத்தால் இந்தப் புலம்பெயர் தமிழர் நல வாரியம் அமைக்கப்படும் என்று தமிழக அரசு மற்றும் புலம்பெயர்ந்த தமிழர்கள் என 13 பேர்களுடன் இந்த வாரியம் இயங்கும் என்றும் முதல்வர் முக ஸ்டாலின் அவர்கள் அறிவித்துள்ளார். இது குறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:

உலகளாவிய இனம்‌ ஒன்று உண்டென்றால்‌ அது தமிழினம்‌ தான்‌. தொன்மை மிக்க இந்த தமிழினம்‌, பரவிய நாடுகளின்‌ பட்டியல்‌ பெரிது. தொல்‌ பழமை நாகரீக பாரம்பரியம்‌ உள்ள சில இனங்களில்‌ தமிழினமும்‌
ஒன்று! அப்டி கடல்‌ கடந்து, நாடுகள்‌ கடந்து வாழும்‌ வெளிநாட்டோர் தமிழினத்துக்கு நம்பிக்கை தரும்‌ வகையில்‌ ஒரு முக்கிய அறிவிப்பு வெளியிடப்படுகிறது.

உலகின்‌ பெரும்பான்மை நாடுகளில்‌ வாழும்‌ இனமாக நம்முடை தமிழினம்தான்‌ இருக்கிறது. 30-க்கும்‌ மேற்பட்ட நாடுகளில்‌ அதிக எண்ணிக்கையிலும்‌, 60-க்கும்‌ மேற்பப்ட நாடுகளில்‌ குறைந்த.
எண்ணிக்கையிலும் தமிழர்கள் வாழ்கிறார்கள்‌. வணிகம்‌ செய்வதற்காக சென்றார்கள்‌, வாழ்வதற்காக சென்றார்கள்‌. புதிய இடங்களை அறிவதற்காகச்‌ சென்றார்கள்‌… இப்படி‌ பலருக்கும்‌ பல நோக்கங்கள்‌ இருந்திருக்கும்‌ இத்தகைய இடப்பெயர்வுகள்‌ காலம்காலமாக நடந்து வருகின்றன.

எங்கே தமிழர்கள்‌ வாழ்ந்தாலும்‌, அவர்களுக்கு தமிழ்நாடுதான்‌ தாய்வீடு. அவர்கள்‌. மீது அன்பு. செலுத்துவது. மட்டுமல்ல, அரவணைப்பும்‌, பாதுகாப்பதும்‌ தாய் தமிழ்நாட்டின்‌ கடமையாகும்‌… இப்படி பல்வேறு
நாடுகளுக்குச்‌ சென்று வாழும்‌ தமிழ்‌ மக்களின்‌ பிரச்சனைகளைத்‌ தீர்க்கவும்‌, உதவிகளைச்‌ செய்யவும்‌ தமிழ்நாடு அரசு முன்வந்துள்ளது.

இவ்வாறு அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

seithichurul

Trending

Exit mobile version