இந்தியா

தமிழக எம்பிக்கள் பதவியேற்பு எதிரொலி: தேசிய அளவில் ட்ரெண்டான தமிழ் வாழ்க!

Published

on

பாஜக தொடர்ந்து இரண்டாவது முறையாக ஆட்சி அமைத்து முதல் மக்களவை கூட்ட தொடர் நேற்று முன்தினம் தொடங்கியது. இதில் தற்காலிக மக்களவை சபாநாயகராக வீரேந்திர குமார் பதவியேற்றார். அவர் முன்னிலையில் நேற்று முன்தினம் பிரதமர் மோடி உள்ளிட்ட பாஜகவினர் பதவியேற்றனர்.

இந்நிலையில் இரண்டாவது நாளான நேற்று தமிழக எம்பிகள் பதவியேற்றனர். நேற்று முன்தினம் பலர் தங்கள் பிராந்திய மொழிகளில் பதவியேற்றதால் நேற்று தமிழக எம்பிக்கள் 39 பேரும் தமிழிலேயே பதவியேற்றனர். பதவியேற்றபின் முடிவில் தமிழக எம்பிக்கள் தங்கள் விருப்பமான வாசகத்தை கூறி முடிவு செய்தனர்.

அதில், தமிழக எம்பிக்கள் பலர் வாழ்க தமிழ், பெரியார் வாழ்க, தமிழ் வாழ்க என்ற முழக்கத்தோடு தங்கள் உரையை முடித்தனர். அப்போது ஒவ்வொருமுறை தமிழக எம்பிக்கள் தங்கள் உரையை தமிழில் அந்த குறிப்பிட்ட வசனத்துடன் முடிக்கும்போது மக்களவையில் உள்ள மற்ற மாநில குறிப்பாக பாஜக எம்பிக்கள் பாரத் மாதா கீ ஜெய், ஜெய் ஸ்ரீராம் போன்ற வசனங்களை எதிர்ப்புக்கு கூறி முழக்கமிட்டனர்.

தமிழ் வாழ்க என்ற தமிழக எம்பிக்களின் முழக்கத்துக்கு எதிர் முழக்கமாக பாரத் மாதா கீ ஜெய் என கூறப்பட்டதால் மக்களவையில் சலசலப்பு ஏற்பட்டது. மேலும் நேற்று தமிழக எம்பிக்கள் தமிழில் பதவியேற்றபோதும் சில சலசலப்புக்கள் இருந்தது. இதனால் தமிழக எம்பிக்கள் நேற்று தமிழில் பதவியேற்றதும், தமிழ் வாழ்க என கூறியதும் தேசிய அளவில் பேசும்பொருளாக மாறியது.

நேற்று டுவிட்டரில் நெட்டிசன்கள் #தமிழ்_வாழ்க என்ற ஹேஷ்டேக்கை ட்ரெண்ட் செய்யத் தொடங்கினர். தொடக்கத்தில் இந்திய அளவில் முதல் மூன்று இடத்தை பிடித்த இந்த ஹேஷ்டேக், பின்னர் உலகக் கோப்பை கிரிக்கெட் உள்ளிட்ட ஹேஷ்டேக்குகளை பின்னுக்குத் தள்ளி இந்திய அளவில் முதலிடத்தைப் பிடித்து நீடித்தது.

seithichurul

Trending

Exit mobile version