சினிமா செய்திகள்

கொரோனா காரணமாகச் சம்பளத்தைக் குறைத்துக்கொண்ட பிரபல நடிகர்கள்.. எவ்வளவு தெரியுமா?

Published

on

கோவிட்-19 காரணமாகத் தயாரிப்பிலிருந்து படங்களின் நிதிச் சுமை அதிகரித்துள்ளது. எனவே நடிகர்களைச் சந்தித்துப் பேசி வரும் நடப்பு தயாரிப்பாளர்கள் சங்கம் சம்பளத்தைக் குறைக்கக் கோரிக்கை வைத்து வந்தது.

அதனை ஏற்றுக்கொண்ட முக்கிய நடிகர்கள் தங்களின் சம்பளத்தைக் குறைத்துள்ளன. இந்த பட்டியலில் முதலாவதாக நடிகர் தனுஷ் தற்போது ஷூட்டிங் நடைபெற்றும் வரும் படங்கள் மற்றும் அடுத்து நடிக்க உள்ள படங்களின் சம்பளத்திலிருந்து 2 கோடி ரூபாய் குறைக்க ஒப்புக்கொண்டுள்ளாராம்.

இவரைத் தொடர்ந்து நடிகர் சிவகார்த்திகேயன் 20 சதவீத சம்பளத்தைக் குறைத்துக்கொள்ள ஒப்புக்கொண்டுள்ளார். நடிகர் விஜய் சேதுபதி தான் நடிக்கும், நடிக்கவிருக்கும் படங்களின் சம்பளத்தில் 1 கோடியைக் குறைக்க முன்வந்துள்ளாராம்.

முன்னதாக, கோவிட்-19 தொடக்கக் காலத்திலேயே முதல் ஆளாக நடிகர் விஜய் ஆண்டனி தான் நடிக்கும் படங்களின் 25 சம்பளத்தைக் குறைப்பதாக அறிவித்தார். இவரை தொடர்ந்து ஹரிஷ் கல்யாண் 30 சதவீத சம்பளத்தை விட்டுக்கொடுத்தார். மகத் தான் நடிக்கும் படங்களின் சம்பளத்தில் 80 சதவீதம் வரை விட்டுக்கொடுக்கத் தயார் என்றார். சிபிராஜ் 50 சதவீதம் சம்பளத்தைக் குறைத்து இருந்தார். இது குறித்து நாம் ஏற்கனவே தெரிவித்தும் இருந்தோம்..

நடிகர் விஜய் தற்போது புதிய படங்கள் ஏதும் நடிக்கவில்லை என்பதால் அவர் சம்பளம் குறைப்பு குறித்து எந்த தகவலும் இல்லை. வலிமை ஷீட்டிங்கில் உள்ள அஜித் இப்போதைக்குச் சம்பளத்தைக் குறைக்கும் முடிவு ஏதும் எடுக்கவில்லை. ஆனால் படத்தை ரிலீஸ் செய்யும் போது தயாரிப்பாளருக்கு நிதி நெருக்கடி ஏற்பட்டால் தன்னால் முடியும் உதவியைச் செய்வதாக உறுதி அளித்துள்ளார் என்று தகவல்கள் கூறுகின்றன.

Trending

Exit mobile version