இந்தியா

‘வேண்டும்… வேண்டும்… விவாதம் வேண்டும்…’- நாடாளுமன்றத்தை அதிரவைத்த கோஷம்

Published

on

தற்போது இந்திய நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் மழைக் கால கூட்டத் தொடர் நடந்து வருகிறது.

இந்த கூட்டத் தொடர் முழுவதும் எதிர்க்கட்சிகள் பெட்ரோல் விலை உயர்வு, பெகாசஸ் உளவு சர்ச்சை உள்ளிட்ட பிரச்சனைகளை எழுப்பி தொடர் அமளியில் ஈடுபட்டு வருகின்றன. இதனால் இரு அவைகளிலும் எந்த வித நடவடிக்கைகளும் நடக்காமல் தொடர்ந்து ஒத்தி வைக்கப்பட்டு வருகின்றன.

இன்று நாடாளுமன்றத்தின் ராஜ்ய சபா அவையில், ஒன்றிய அரசு தனக்கிருக்கும் பலத்தின் காரணமாக சட்டம் ஒன்றை முன்மொழிந்து அதை நிறைவேற்றப் பார்த்தது. அப்போது அவையில் இருந்த தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்கள். ஒன்றிய அரசின் இந்தப் போக்கைக் கண்டித்து ‘வேண்டும்… வேண்டும்… விவாதம் வேண்டும்…’ என்று கோஷங்களை எழுப்பினார்கள்.

தொடர்ந்து பல வட மாநில நாடாளுமன்ற உறுப்பினர்களும் அதே கோஷத்ததை தமிழில் எழுப்பினார்கள். இதனால் அவையில் இருந்த ஆளுங்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்கள் பலரும் செய்வதறியாமல் திகைத்தனர்.

இந்த சம்பவம் குறித்து காங்கிரஸ் நிர்வாகி ஜெய்ராம் ரமேஷ், தனது ட்விட்டர் பக்கத்தில், முதல் முறையாக நாடாளுமன்றத்தில் எதிர்ப்பு மொழியாக தமிழ் எல்லோராலும் கையாளப்பட்டு உள்ளது என்றுள்ளார்.

Trending

Exit mobile version