சினிமா செய்திகள்

விஜய் தேவர்கொண்டா படத்தைத் திரைக்கு வரும் முன்பே இணையத்தில் வெளியிட்ட தமிழ் ராக்கர்ஸ்!

Published

on

விஜய் தேவர்கொண்டா நடிப்பில் நவம்பர் 17-ம் தேதி திரைக்கு வர இருந்த டாக்ஸி வாலா திரைப்படத்தினை நவம்பர் 13-ம் தேதியே தமிழ் ராக்கர்ஸ் வெளியிட்டு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தமிழ் ராக்கர்ஸ் எப்போதும் படங்கள் வெளியான முதல் நாள் அன்றே அந்தப் பட்டத்தினை வெளியிடுவதாகச் சொல்லிய படி இணையத்தில் பதிவேற்றும்.

ஆனால் இந்த முறை வழக்கத்திற்கு மாறாக டாக்ஸி வாலா தெலுங்கு திரைப்படத்தின் எச்டி பதிப்பை 5 நாட்கள் முன்பே இணையத்தில் வெளியிட்டுப் படக்குழுவினருக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சர்கார் படத்தினையும் அப்படித் தான் சொன்னபடியே நவம்பர் 6-ம் தேதி ரிலீஸ் செய்தது.

மேலும் சங்கர் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிப்பில் உருவான 2.0 திரைப்படத்தினைத் தமிழ் ராக்கர்ஸ் 29-ம் தேதி காலையே வெளியிடவோ என்று அதிகாரப்பூர்வமாகத் தெரிவித்துள்ளது.

seithichurul

Trending

Exit mobile version