தமிழ்நாடு
விட்டா இன்று 100 மிமீ மழை பெய்துவிடுமோ? தமிழ்நாடு வெதர்மேன் டுவிட்!
சென்னை மற்றும் சுற்றுப்புறங்களில் இன்று திடீரென மழை பெய்து வரும் நிலையில் விட்டால் 100 மில்லி மீட்டர் மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக தமிழ்நாடு வெதர்மேன் டுவிட்டரில் பதிவு செய்துள்ளார்.
கிழக்கு பக்கம் மேகங்கள் திரண்டு இருப்பதாகவும் இதன் காரணமாக சென்னை மற்றும் அதன் சுற்றுப்புறத்தில் நல்ல மழை பெய்து வருவதாகவும் தமிழ்நாடு வெதர்மேன் தெரிவித்துள்ளார்.
இன்று மதியம் மூன்று முப்பது மணி அளவில் எம்ஆர்சி நகரில் 67 மில்லி மீட்டரும், மீனம்பாக்கத்தில் 46 மில்லி மீட்டரும், நந்தனம் பகுதியில் 36 மில்லி மீட்டரும், நுங்கம்பாக்கம் பகுதியில் 18 மில்லி மீட்டரும், வானகரம் பகுதியில் 15 மில்லி மீட்டரும், சோழிங்கநல்லூர் பகுதியில் 4 மில்லி மீட்டர் மழை பெய்து உள்ளதாக அவர் தெரிவித்துள்ளார். இதே ரீதியில் இன்னும் சில மணி நேரங்கள் மழை பெய்தால் எம்ஆர்சி நகரில் 100 மில்லி மீட்டர் மழை பெய்ய அதிக வாய்ப்பு இருப்பதாக அவர் தெரிவித்துள்ளார்.
இந்த நிலையில் சென்னையின் பல பகுதிகளில் தொடர்ச்சியாக ஒரு மணி நேரத்துக்கு மேல் மழை பெய்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது. ஏற்கனவே இன்று சென்னை உள்பட தமிழகத்தின் பல பகுதிகளில் மிதமான மழை முதல் கனமழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்து இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.
Power of Easterly wave and it is still going on. Vitta today itself surprise century might come in DGP Marina and MRC Nagar. Till 3.30 pm.
MRC Nagar – 67 mm
Meenambakkam – 41
Nandanam – 36
Nungambakkam – 18
Vanagaram – 15
Shollinganallur – 4— Pradeep John (Tamil Nadu Weatherman) (@praddy06) December 30, 2021