இந்தியா

செம்ம நியூஸ்.. தமிழ்நாட்டின் இந்த சுங்கச் சாவடிகள் எல்லாம் அடுத்த 3 மாதத்தில் மூடப்படும்!

Published

on

அடுத்த 3 மாதத்தில், தேசிய நெடுஞ்சாலைகளில் 60 கிலோ மீட்டர் இடைவெளிக்குள் உள்ள எல்லா சுங்கச் சாவடிகளும் மூடப்படும் என மத்திய சாலை போக்குவரத்துத் துறை அமைச்சர் நிதின் கட்காரி தெரிவித்துள்ளார்.

2022-2023 ஆம் நிதியாண்டில் நடைபெற உள்ள தேசிய நெடுஞ்சாலை திட்டப் பணிகள் குறித்து மக்களவையில் பேசிய நிதின் கட்காரி, அடுத்த 3 மாதத்தில், தேசிய நெடுஞ்சாலைகளில் 60 கிலோ மீட்டர் இடைவெளிக்குள் இரண்டு சுக்கச் சாவடிகள் இருக்கும் போது அதில் ஒன்று மூடப்படும் என செவ்வாய்க்கிழமை அதிரடியாக அறிவித்தார்.

நிதின் கட்காரியின் இந்த அறிவிப்பு அவரது அதிகாரப்பூர்வ டிவிட்டர் பக்கத்திலும் பகிரப்பட்டுள்ளது.

தமிழ்நாட்டில் சென்னை – திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் விக்ரவாண்டியில் 50 கிலோ மீட்டர் இடைவெளியில் இரண்டு சுங்கச் சவடிகள் உள்ளன.

அதே போல சமயபுரம் – பூதக்குடி இடையில் ஒரு சுங்கச் சாவடியும், சென்னை – பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் வாணியம்பாடி பள்ளிகொண்டா இடையில் 48 கிலோ மீட்டர் இடைவெளியில் ஒரு சுங்கச் சாவடியும், சென்னை பைபாஸ் சாலையில் சூரப்பட்டு மற்றும் வாநகரம் பகுதியில் சுங்கச் சாவடியும் உள்ளன.

இந்த சுங்கச் சாவடிகள் எல்லாம் அடுத்த 3 மாதத்தில் மூடப்படும் மக்களுக்கு மகிழ்ச்சி செய்தியாக அமைந்துள்ளது.

Trending

Exit mobile version