தமிழ்நாடு

இனிமேல் வெளிநாட்டுடன் தான் மோதல், உள்ளூரில் மோதல் இல்லை: முதல்வர் ஸ்டாலின்

Published

on

இனிமேல் இந்தியாவில் உள்ள மாநிலங்களுடன் மோதல் இல்லை என்றும் வெளிநாட்டு உடன் தான் ஒப்பீடு என்றும் தமிழக முதல்வர் முக ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

தமிழக முதல்வராக முக ஸ்டாலின் கடந்த மே மாதம் பதவியேற்றதிலிருந்து இந்தியாவின் நம்பர் ஒன் முதல்வராக அவர் செயல்பட்டு வருகிறார் என்றும் தமிழகத்தையும் நம்பர் ஒன் மாநிலமாக மாற்றி உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் இன்று அதிகாரிகளுடனான கூட்டத்தில் பேசிய முதல்வர் முக ஸ்டாலின் அவர்கள் நாட்டின் பிற மாநிலங்களுடன் ஒப்பிடும்போது நாம் சிறப்பாக செய்து கொண்டிருக்கிறோம் என்ற மனநிலையை தவிர்க்க வேண்டும் என்றும், வளர்ந்த நாடுகள் மற்றும் தெற்காசிய நாடுகளின் செயல்பாட்டுக்கு இணையாக நம்முடைய ஒப்பீடு இருக்க வேண்டும் என்றும் பேசியுள்ளார். அவரது இந்த பேச்சு அவரது தொலைநோக்கு பார்வையை காட்டுவதாக அனைவரும் பாராட்டு தெரிவித்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

சென்னை தலைமைச் செயலகத்தில் இன்று அனைத்து துறை செயலாளர்கள் ஆய்வு கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் பேசிய தமிழக முதல்வர் முக ஸ்டாலின் அவர்கள் இதுவரை வெளியான அறிவிப்புகளில் 80 சதவீத அறிவிப்புகளுக்கு உரிய ஆணைகள் அந்தந்தத் துறையால் வெளியிடப்பட்டுள்ளன என்றும் இதற்கு என்னுடைய பாராட்டுக்களை தெரிவித்துக் கொள்கிறேன் என்றும் மீதமுள்ள அறிவிப்புகளுக்கும் உரிய ஆணைகள் உடனடியாக வெளியிட்டு 100% இலக்கினை அடைய வேண்டும் என்றும் கூறியுள்ளார்.

மேலும் வெளியிட்டுள்ள ஆணைகள் அனைத்தும் செயல்பாட்டுக்கு வந்து உள்ளனவா? மக்களுக்கு பயன்பட்டு வந்துள்ளனவா? என்பதை கண்காணிக்க வேண்டியது அவசியம் என்றும் உரிய காலத்தில் நிதிகள் விடுவிக்கப்பட்டு பணிகள் துரிதமாக நடைபெற வேண்டும் என்றும் அவர் அறிவித்துள்ளார்.

மேலும் நம்மை விட அதிகம் வளர்ந்து நாடுகளுடன் தான் நம்மை ஒப்பிட வேண்டும் என்றும் நாம் நாட்டின் பிற மாநிலங்களுடன் ஒப்பிடுவதை விட வளர்ந்த நாடுகள் மற்றும் தெற்காசிய நாடுகளுடன் ஒப்பிட்டு நமது இலக்கை நிர்ணயிக்க வேண்டும் செய்ய வேண்டும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

seithichurul

Trending

Exit mobile version