தமிழ்நாடு

சென்னை மக்களே வெயில் அடிக்கும் துணியை காயப்போடுங்க: தமிழ்நாடு வெதர்மேன் டுவிட்!

Published

on

 

சென்னை உள்பட தமிழகம் முழுவதும் கடந்த சில நாட்களாக வளிமண்டல மேலடுக்கு சுழற்சி மற்றும் வடகிழக்கு பருவமழை காரணமாக கனமழை பெய்து வருகிறது என்பதை பார்த்து வருகிறோம்

இந்த நிலையில் தற்போது மூன்றாவது முறையாக மீண்டும் வங்க கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வு தோன்ற வாய்ப்பு இருப்பதாக கூறப்படுவதால் மீண்டும் கனமழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது

இந்த நிலையில் புதிதாக தோன்றிய காற்றழுத்த தாழ்வு குறித்து தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப் ஜான் அவர்கள் கூறுகையில், ‘புதிய காற்றழுத்த தாழ்வு தெற்கு மற்றும் தென் மேற்கு பகுதியில் உருவாகி உள்ளது என்றும் இதன் காரணமாக தென் தமிழகத்தில் அதிக மழை பெய்யும் என்றும் தெரிவித்துள்ளார்

ராமநாதபுரம், தூத்துக்குடி, புதுக்கோட்டை, நாகை, சிவகங்கை, கன்னியாகுமரி, தென்காசி, விருதுநகர், நெல்லை, கேரளாவின் திருவனந்தபுரம், கொல்லம் மற்றும் தெற்கு கேரளா பகுதிகளில் கனமழை பெய்யும் என்றும் அவர் கூறியுள்ளார்

மேலும் சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு ஆகிய மாவட்டத்தினர் துணியை காய போடலாம் என்றும் அந்த அளவுக்கு சரியான வெயில் அடிக்கும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்

இதனை அடுத்து புதிதாக தோன்றிய காற்றழுத்த தாழ்வு சென்னை உள்பட வட மாவட்டங்களுக்கு எந்தவித பிரச்சனையும் இல்லை என்பது உறுதியாகி உள்ளது.

Trending

Exit mobile version