தமிழ்நாடு

ஒரே வாரத்தில் 2 காற்றழுத்த தாழ்வு மண்டலம்: தமிழ்நாடு வெதர்மேன் சொல்வது என்ன?

Published

on

சென்னையை நோக்கி கடந்தவாரம் காற்றழுத்த தாழ்வு மண்டலம் வந்த நிலையில் மீண்டும் காற்றழுத்த தாழ்வு மண்டலம் சென்னை நோக்கி வருவது குறித்து தமிழ்நாடு வெதர்மேன் தனது சமூக வலைத்தளத்தில் கூறியது என்ன என்பதை தற்போது பார்ப்போம்.

வங்கக் கடலில் தோன்றிய காற்றழுத்த தாழ்வு, காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறி தற்போது சென்னையை நோக்கி வந்துகொண்டிருக்கிறது. சென்னையில் இருந்து 250 கிலோ மீட்டர் தொலைவில் இந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் கொண்டிருப்பதாகவும் இதன் காரணமாக சென்னை மற்றும் வட தமிழக கடற்கரை பகுதிகளிலும் ஆந்திராவில் கனமழை பெய்யும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில் இன்று காலை இதுகுறித்து தனது சமூக வலைத்தளத்தில் பதிவு செய்துள்ள தமிழ்நாடு வெதர்மேன், ‘குறைந்த காற்றழுத்தம் தீவிரமாகி விட்டதால் சென்னை உள்பட மேலும் பல மாவட்டங்களில் கனமழை பெய்யும்.

இந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் மேற்கிலிருந்து வடமேற்கு திசைக்கு நகர்ந்து வட தமிழகத்திற்கும் தென் ஆந்திராவுகு இடையே நகர்ந்து வருகிறது. இதன் காரணமாக சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், விழுப்புரம், ராணிப்பேட்டை, திருப்பத்தூர், திருவண்ணாமலை, கடலூர் ஆகிய மாவட்டங்களில் கனமழை பெய்யும் என்று கூறியுள்ளார்.

இதனை அடுத்து அவர் மேலும் செய்த ஒரு பதிவில், ‘எதிர்பார்த்தபடியே காற்றழுத்த தாழ்வு மண்டலம் தற்போது உருவாகி விட்டது. ஒரே வாரத்தில் இரண்டு முறை சென்னையை தாழ்வு மண்டலம் கடப்பதால் இன்றும் நாளையும் கனமழை பெய்யும். சென்னைக்கு பக்கத்தில் காற்றழுத்த தாழ்வு மண்டலம் நெருங்க நெருங்க கனமழை அதிகரிக்கக்கூடும். எனவே சென்னை வாசிகள் கன மழையை எதிர் நோக்கி காத்திருக்கலாம் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

Trending

Exit mobile version