தமிழ்நாடு

சென்னையில் வெளுக்கப்போகுது மழை: தமிழ்நாடு வெதர்மேன் தகவல்!

Published

on

சென்னையில் அடுத்த சில நாட்களுக்கு கனமழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்த நிலையில் தமிழ்நாடு வெதர்மேன் அவர்களும் அதையே தெரிவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

சென்னையில் வழக்கம் போல் நள்ளிரவு முதல் காலை வரை மழை மேகங்கள் சூழ்ந்த சாதகங்கள் இருக்கிறது என்றும் சென்னையின் புறநகர் பகுதிகளில் கனமழை பெய்ய அதிக வாய்ப்பு இருப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

இருப்பினும் சென்னையிலிருந்து பாண்டிச்சேரி மற்றும் டெல்டா பகுதிகளில் கனமழை மாறுவதற்கான வாய்ப்புகள் அதிகம் என்றும் அவர் கூறி உள்ளார். சென்னையின் புறநகர் பகுதிகளான ஈசிஆர் பகுதியில், செங்கல்பட்டு பகுதிகளில் நேற்று மழை பெய்யாமல் சமநிலையில் இருந்தது என்றும் இருப்பினும் குறைந்த காற்றழுத்த தாழ்வு காரணமாக நாகை முதல் சென்னை வரை உச்சகட்ட மழை பெய்யும் வாய்ப்பு இருக்கிறது என்று எதிர்பார்க்கப்படுவதாகஊ, நவம்பர் 10 11 ஆகிய தினங்களில் சென்னையில் மிக அதிகமாக மழை பெய்யும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

புதுச்சேரி, கடலூர், நாகப்பட்டினம், ராமநாதபுரம் ஆகிய பகுதிகளில் கனமழை பெய்யும் என்றும் தெற்கு மற்றும் மேற்கு தமிழகம் மற்றும் கேரளாவில் கனமழை பெய்ய வாய்ப்பு இருப்பதாகவும் ஒட்டுமொத்தமாக தமிழகத்திற்கு இன்னொரு மகத்தான மழை நாள் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

seithichurul

Trending

Exit mobile version