தமிழ்நாடு

சென்னை மக்களே உஷாராக இருங்க: எச்சரிக்கை விடுத்த தமிழ்நாடு வெதர்மேன்!

Published

on

சென்னை உள்பட நான்கு மாவட்ட மக்கள் இன்று இரவு உஷாராக இருக்க வேண்டும் என தமிழ்நாடு வெதர்மேன் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

சென்னை உள்பட தமிழகத்தின் பல பகுதிகளில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வருகிறது என்பதும் இதனால் தாழ்வான பகுதியில் உள்ள குடியிருப்புகள் வெள்ளத்தில் மூழ்கி உள்ளன என்பதும் தெரிந்ததே.

இந்த நிலையில் சென்னை உள்பட தமிழகத்தின் மழை நிலவரம் குறித்து அவ்வப்போது தனது சமூக வலைதளப் பக்கத்தில் அறிவிப்புக்களை வெளியிட்டு வரும் தமிழ்நாடு வெதர்மேன் சற்று முன்னர் சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர் ஆகிய பகுதியில் உள்ள மக்கள் இன்று இரவு முதல் நாளை காலை வரை உஷாராக இருக்க வேண்டும் என்றும் பலத்த காற்றுடன் கூடிய கனமழை பெய்ய வாய்ப்பு இருப்பதாகவும் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

மேலும் இந்த மழை நம்மை ஆச்சரியப்படுத்த வாய்ப்பு இருப்பதாகவும் கடந்த முறை அரபி கடலில் உண்டான காற்றழுத்தம் கொடுத்த மழையை இந்த மழை நமக்கு கொடுக்கும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

சென்னையில் ஏற்கனவே கடந்த சில நாட்களாக பெய்த மழையின் காரணமாக சாலைகளில் வெள்ளநீர் சூழ்ந்துள்ளது என்பதும் ஒருசில சுரங்கப் பாதைகள் மூடப்பட்டுள்ளன என்பதும் குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் இன்று இரவு முதல் நாளை காலை வரை கனமழை பெய்யும் என மீண்டும் தமிழ்நாடு வெதர்மேன் அறிவித்துள்ளது சென்னை மக்களுக்கு பெரும் அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

seithichurul

Trending

Exit mobile version