தமிழ்நாடு

சென்னையில் 1000 மிமீ மழை: இதற்கு முன் எந்தெந்த ஆண்டுகளில் பெய்தது?

Published

on

சென்னையில் இந்த ஆண்டு நவம்பர் 27ஆம் தேதி வரை 1000 மில்லி மீட்டர் மழை பெய்து உள்ளதாகவும் இதற்கு முன் கடந்த 200 ஆண்டுகளில் மூன்று முறை மட்டுமே 1000 மில்லி மீட்டர் மழை பெய்து உள்ளதாகவும் தமிழ்நாடு வெதர்மேன் அறிவித்துள்ளார்.

சென்னை உள்பட தமிழகம் முழுவதும் பெய்து வரும் மழை குறித்த விவரங்களை தமிழ்நாடு வெதர்மேன் அவ்வப்போது தனது பேஸ்புக் பக்கத்தில் தெரிவித்து வருகிறார் என்பதை பார்த்து வருகிறோம். இந்த நிலையில் கடந்த 200 ஆண்டுகளில் நான்காவது முறையாக சென்னையில் 1000 மில்லி மீட்டர் மழை பெய்யும் வாய்ப்பு இருப்பதாக ஏற்கனவே இரண்டு நாட்களுக்கு முன்னர் தெரிவித்திருந்தார் என்பதை பார்த்தோம்.

இந்த நிலையில் இந்த ஆண்டு நவம்பர் மாதம் 27ஆம் தேதி மாலை ஏழு முப்பது மணி வரை 1003 மில்லி மீட்டர் மழை சென்னையில் பெய்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். மேலும் இதற்கு முன் 1000 மில்லி மீட்டர் பெய்த மழை பெய்து ஆண்டுகள் குறித்த விவரங்களையும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

கடந்த 1918ம் ஆண்டு நவம்பர் மாதம் 1088 மில்லி மீட்டர் மழை பெய்துள்ளதாகவும் 2005ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் 1078 மில்லி மீட்டர் மழை பெய்துள்ளதாகவும் 2015ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 1049 மில்லிமீட்டர் மழை பெய்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இதுவரை அதிகபட்சமாக நவம்பர் மாதத்தில் 1088 மில்லி மீட்டர் மழை கடந்த 1918ம் ஆண்டு பெய்த நிலையில் இருநூறு ஆண்டுகளுக்குப் பின் அந்த சாதனையை முறியடிக்க வாய்ப்பு இருப்பதாகவும் இன்னும் மூன்று நாட்களில் அந்த சாதனையை முறியடிக்கப்படும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

seithichurul

Trending

Exit mobile version