தமிழ்நாடு

200 வருடங்களில் நான்காவது முறை: சென்னை மழை குறித்து தமிழ்நாடு வெதர்மேன்

Published

on

கடந்த 200 வருடங்களில் இதுவரை 4 முறை மட்டுமே மிக கனமழை சென்னையில் பெய்து உள்ளதாகவும் இதனை அடுத்து தற்போது தான் சென்னையில் அதிக மழை பெய்து உள்ளதாகவும் தமிழ்நாடு வெதர்மேன் தனது டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

சென்னையில் கடந்த 200 வருடங்களில் 4 முறை மட்டுமே 1000 மில்லி மீட்டர் மழை பெய்துள்ளது என்றும் தற்போது சென்னையில் 930 மிமீ மழை பெய்துள்ளதால் இன்னும் 70 மில்லி மீட்டர் மழை பெய்தால் 1000 மில்லி மீட்டர் மழையை எட்டிவிடும் என்றும் இந்த நவம்பர் மாதத்திற்குள் 1,000 மில்லி மீட்டர் மழை அளவை எட்டிவிட அதிக வாய்ப்பு இருப்பதாகவும் தமிழ்நாடு வெதர்மேன் தெரிவித்துள்ளார்.

மேலும் டெல்டா பகுதியில் உள்ள மேகங்கள் தற்போது சென்னையை நோக்கி நகர்ந்து வருவதால் சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர் ஆகிய மாவட்டங்களில் மிக பலத்த மழை பெய்யும் வாய்ப்பு இருப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

கடந்த 200 ஆண்டுகளில் சென்னையில் அதிக மழை பெறுவது இது ஐந்தாவது முறை என்ற தகவல் சென்னை மக்களுக்கு பெரும் ஆச்சரியத்தை அளித்து உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

seithichurul

Trending

Exit mobile version