தமிழ்நாடு

சென்னையில் மீண்டும் கனமழையா? தமிழ்நாடு வெதர்மேன் என்ன சொல்கிறார்?

Published

on

சென்னை உள்பட 4 மாவட்டங்களில் அதிக மழை பெய்யும் என்பதால் இன்று காலை ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது என்பது தெரிந்ததே. இந்த நிலையில் நாளை தமிழகம் முழுவதும் அதிக மழை பெய்யும் என்பதால் தமிழகம் முழுவதும் ரெட் அலர்ட் விடுக்கப்பட்டு உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

குறிப்பாக சென்னையில் மிக அதிகமாக மழை பெய்யும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் கூறிய ஒரு சில மணி நேரத்தில் சென்னையில் மழை தொடங்கி விட்டது என்பதும் தற்போது சென்னையின் பல பகுதிகளில் மழை பெய்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் சென்னை உள்பட தமிழகத்தில் மழை குறித்து அவ்வப்போது தனது சமூக வலைத்தள பக்கத்தில் பதிவு செய்து வரும் தமிழ்நாடு வெதர்மேன் இது குறித்து கூறிய போது சென்னைக்கு மீண்டும் சம்பவம் இருக்கின்றது என்றும் மிக அதிகமான மேகக்கூட்டங்கள் இருப்பதால் சென்னை உள்பட வடக்கு கடலோர மாவட்டங்களில் மிக கனமழை பெய்யும் என்றும் தெரிவித்துள்ளார்.

சென்னையில் இன்று இரவு ஆரம்பிக்கும் மழை நாளை வரை தொடர்ந்து பெய்யும் என்று அவர் கூறியதில் சென்னைக்கு மீண்டும் கனமழை இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளதாக தெரிகிறது.

சென்னையில் ஏற்கனவே கடந்த வாரம் பெய்த கனமழை காரணமாக பல இடங்களில் வெள்ளத்தால் தத்தளித்தது என்பதும் சென்னை அருகே உள்ள நீர்நிலைகள் அனைத்தும் நிரம்பி விட்டது என்பதும் குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் மீண்டும் கன மழை பெய்தால் சென்னையின் நிலை என்ன ஆகுமோ என்ற அச்சம் அனைவர் மனதிலும் ஏற்பட்டுள்ளது.

Trending

Exit mobile version